வாக்காளர் வாய்ஸ்: வாக்குகள் விற்பனைக்கல்ல

By செய்திப்பிரிவு

இந்த வாரத்துக்கான தலைப்பு



வாக்குக்காக பணமோ, ‘பரிசு’ பொருளோ அளிக்க அரசியல் கட்சிகள் தேடி வந்தால்... அவர்களை மக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஓட்டுக்கு ‘லஞ்சம்’ கொடுப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த சாமானிய மனிதர்களால் முடியுமா? அதிலுள்ள பிரச்சினைகள் என்னென்ன? நடைமுறையில் செயல்படுத்தக் கூடிய வகையில் யோசனைகளைச் சொல்லுங்கள்...

நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 என்ற எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.



தனவந்தன், தாம்பரம்

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை சாமான்ய தனி மனிதரால் தடுக்க இயலாது. அந்தந்த பகுதி மக்கள் ஒன்று கூடினால் ஓரளவுக்காவது தடுக்க முடியும். பகுதி மக்கள் ஒன்றுகூடி “எங்கள் பகுதி வாக்குகள் விற்பனைக்கல்ல“ என அறிவிப்புப் பலகை வைக்கலாம். தேர்தல் ஆணையம் எங்கு பணம் வழங்கப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்டு அங்கெல்லாம் துணை ராணுவப் படையை காவல் பணியில் ஈடுபடுத்தலாம். முன்னணி நடிகர்களை வைத்து வாக்களிக்க பணம் பெறுவது தவறு என விளம்பரம் செய்யலாம். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட் பாளருக்கும் சம்பந்தப்பட்ட கட்சிக்கும் பெரிய அளவில் தண்டனை வழங்கப் பட்டால்தான் இதைத் தடுக்க முடியும்.



ஆர்.எத்திராஜன், மேற்கு சைதாப்பேட்டை

லஞ்சம் கொடுப் பவரைவிட லஞ்சம் வாங்குபவரே தண்டனைக்கு முக்கி யமான காரணமா வார்கள். ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்க வருபவர் களும் நம்மைப் போன்ற சக மனிதர்கள்தான். அவர்களை அன்பால் திருத்த வேண்டும். லஞ்சம் கொடுப்பது தவறு என்ற விழிப்புணர்வை அவர் களுக்குச் சொல்லித் தர வேண்டும். நாம் நமது நண்பர்களுக்கும், உறவினர்களுக் கும் லஞ்சம் வாங்குவது தவறு என்பதை விளக்கிச் சொல்ல வேண்டும். வாக் காளர்களாகிய நாம் அனைத்து அரசியல் கூட்டங்களுக்கும் செல்வதை வாடிக்கை யாகக் கொள்ள வேண்டும். வாக்காளர்கள் அரசியல் விழிப்புணர்வோடு இருந்தால் லஞ்சம் தவிர்க்கப்படும்.



ஆ.நந்தகோபாலன், ராமாபுரம்

வாக்களிக்க பணம் வாங்கு வதோ, கொடுப்பதோ தவறு என்பதை மக்களுக்கு உணர்த்துவ தற்காக தேர்தல் ஆணையம் துண்டு பிரசுரம் தயாரித்து ஒவ்வொரு வீட்டிலும் ஒட்ட வேண்டும். அதில் பணம் வாங்கினால் எந்தச் சட்டப் பிரிவின் கீழ் என்ன தண்டனை என்பதையும், பணம் கொடுக்க வருபவர்களைப் பற்றி எந்த எண்ணுக்கு புகார் தர வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பணம் தருபவர்களுக்கும், பெறுபவர்களுக்கும் ஒருவித அச்ச உணர்வு ஏற்படும்.



கண்ணன், முகப்பேர்

வாக்காளர்களுக்கு பணம் கொடுப் பதை தடுப்பது மிகக் கடினமான செயல். தேர்தல் ஆணையம் எவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுத்தாலும், வாகன தணிக்கை, அதிரடி சோதனை என பற்பல முயற்சிகள் எடுத்தாலும், அரசியல்வாதிகளை கட்டுப்படுத்த முடியவே முடியாது. நாட்டில் ஜனநாயகம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. பணநாயகம் வளர்ந்து வருகிறது. வாக்களிக்க பணம் வாங்க மாட்டோம் என்று மக்கள் உறுதியாக இருந்தால் மட்டுமே, இந்த இழிவான கலாச்சாரம் தலையெடுக்காமல் அழிந்து போகும். எனவே வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான், தேர்தல் ஆணையம் செய்யக்கூடிய பணியாக இருக்கும்.



பெயர் வெளியிட விரும்பாத வாசகர்

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க ஒவ்வொரு தெருக்களிலும், வீடுகளுக்கு முன்பும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி கண்காணிக்க வேண்டும். பூத் அதிகாரிகளுக்குக்கூட லஞ்சம் கொடுப்பதாகக் கூறுகிறார்கள். இதுபற்றி விசாரிக்க வேண்டும்.



ஆர்.நேரு, புதுப்பெருங்களத்தூர்

வாக்குக்காக பணமோ, பொருளோ வழங்க கட்சிக்காரர்கள் வந்தால் அதை பெற்றுக் கொள்ளுங்கள். காரணம் பணம் கொடுக்க வருபவர்கள் எல்லாம் புத்தனோ, காந்தியோ இல்லை. அவர்களை எதிர்கொள்ள சாமான்ய மனிதர்களால் முடியாது. நம் நாட்டு சட்டங்கள் எல்லாம் சாமான்ய மனிதர்களுக்கு பாதுகாப்பாக இருப்பது கிடையாது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரமெல்லாம் மே-16 வரைதான். அதன்பிறகு அவர்களை எதிர்கொள்ளும் சாமான்ய மக்களுக்கு பாதுகாப்பு தருவது யார். இதற்கு தீர்வு இவர்கள் தரும் பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஏதோ ஒரு வகையில் உங்களிடம் இருந்து சுரண்டப்பட்ட பணம்தான் இவை. பணமோ பொருளோ கொடுக்காத, கொடுக்க இயலாத நல்லவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற வேண்டும். சாமான்ய மக்களும் இந்த நாட்டை ஆள முடியும் என்பதை மெய்ப்பிக்க வேண்டும். பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று பண மூடைகளை சுமந்து கொண்டு திரியும் அரசியல் கட்சிகளுக்கு படிப்பினை என்பதுகூட சரியாக இருக்காது சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஜனநாயகம் இன்னும் முழுமையாக செத்துவிடவில்லை என்று நம்நாட்டிற்கு கர்ஜனையாக சொல்ல வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

15 days ago

மற்றவை

22 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

6 months ago

மேலும்