இந்த வாரத்துக்கான தலைப்பு:
வாக்குக்காக பணமோ, ‘பரிசு’ பொருளோ அளிக்க அரசியல் கட்சிகள் தேடி வந்தால்... அவர்களை மக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஓட்டுக்கு ‘லஞ்சம்’ கொடுப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த சாமானிய மனிதர்களால் முடியுமா? அதிலுள்ள பிரச்சினைகள் என்னென்ன? நடைமுறையில் செயல்படுத்தக் கூடிய வகையில் யோசனைகளைச் சொல்லுங்கள்...
நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044 42890002 எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.
எஸ்.ஆர்.வீரராகவன், சென்னை
வாக்காளர்களுக்கு என்று தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில் ஜனநாயகம் நிச்சயமாக வெற்றி பெறாது. அச்சமின்றி குரல் கொடுக்க வேண்டும். அரசியல்வாதி களுக்கு இணையான தைரியசாலிகளாக வாக்காளர்கள் மாறவேண்டிய தருணம் இது. அவர்கள் வீடுதேடி வாக்குகளை சேக ரிக்க வரும்போது அவர்களிடம் தங்கள் குறை களை வெளிப்படுத்துவதில் தயக்கமோ, பயமோ இருக்கக் கூடாது. இலவசங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் அவை விலை பேசும் தந்திரம் என்பதை வாக்காளர்கள் உணர வேண்டும். இவ்வளவு இலவசங் களைக் கொடுக்கும் அளவுக்கு இவர்களுக்கு எங்கே இருந்து பணம் வந்தது என்பதை யோசிக்க வேண்டும்.
பெயர் வெளியிட விரும்பாத வாசகர், மேற்கு மாம்பலம்
அரசியல்வாதிகள் பணம் கொடுக்கி றார்கள் என்றால், அவர்களை விட அதை வாங்குபவர்களான வாக்காளர்கள் தான் குற்றவாளிகள் என நினைக்கிறேன். அரசியல் வாதிகள் தங்கள் சொந்தப் பணத்தையா கொடுக்கிறார்கள்? வாக்குக்கு பணம் கொடுக்க அரசியல்வாதிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது? தனிமனித உரிமையை விலை கொடுத்து வாங்குவதை தேசக் குற்றமாக கருத வேண்டும். அந்த வகையில் பணம் கொடுப்பதும் குற்றம். அதை வாங்குவது அதைவிடக் குற்றம். எனவே வாக்குக்கு பணம் கொடுப்பவர்களிடம் நாம் உரிமையுடன் கேள்வி எழுப்ப வேண்டும். 5 வருட ஆட்சியை நேர்மையாக நடத்திக் காட்டுகிறோம் என்று நம்மிடம் உறுதி கொடுத்து அதற்காக வாக்குகளைக் கேட்கிறார்கள் அரசியல்வாதிகள். அதற்குப் பணம் கொடுத்துவிட்டால், நம்மை விலைக்கு வாங்கியது போல் அல்லவா மாறிவிடுகிறது. அரசியல் கட்சிகளிடம் கூலி வாங்குவது போல பணம் பெறுவது என்பது மன்னிக்க முடியாத குற்றம்.
நெல்லை புகாரி, சேப்பாக்கம்
ஒரு ஓட்டு என்பது எத்தனை கோடிக்குச் சமமானது. அதை கேவலம் 200 ரூபாய்க்கு விற்று விடுகிறார்கள். மக்கள் மாற வேண்டும். மாறாவிட்டால் அரசியல்வாதிகள் நமது தலையில் மிளகாய் அரைப்பார்கள். ஆகையால் நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும்.
க.ப.கலையரசன், தேனாம்பேட்டை
லஞ்ச, ஊழல் என்பது தடுக்க முடியாத பிரச்சினை களாக உருவெடுத்துள் ளன. அதேபோலத்தான் வாக்குக்கு பணம் கொடுப்பதையும் தடுக்க முடியாது. சட்டப் படி குற்றமாக இருந்தாலும் பணத் தையும், பரிசுப் பொருட் களையும் கொடுப்பவர் களும் இருக்கிறார்கள், வாங்குபவர்களும் இருக்கிறார்கள் எனும் போது எப்படி அதை முழுமையாக தடுத்து விட முடியும்? நமது வாக்குரிமையை விலை பேசி, பணம் வாங்கக்கூடாது என்ற கொள்கை ஒவ்வொரு மனிதனின் மனதளவில் ஏற்பட வேண்டும். சுதந்திரப் போருக்கு எப்படி இளைஞர்கள் எல்லாம் திரண்டார்களோ, அதுபோல லஞ்ச, ஊழலுக்கு எதிராக மக்கள் இயக்கம் உருவாக வேண்டும். தனி மனித ஒழுக்கம் தான் அந்த மாற்றத்தைக் கொண்டு வரும். அடாவடியாக அரசியல் செய்யும் நிலை ஏற்பட் டிருக்கும் போது, சாமானிய மக்க ளால் வாக்குக்கு பணம் கொடுப் பதை எப்படி சட்டத்தின் மூலம் தண் டிக்க முடியும்? குற்றம் நடப்பதைக் காட்டிக் கொடுத்தால் மக்கள் நிம்மதியாக இருக்க முடியுமா என்பதே சந்தேகம் தான். எனவே அரசியல்வாதிகளை சட்டத்தின் மூலம் சாமானியர்கள் தண்டிப்பது என்பது இயலாத காரியம்.
ராஜசேகரன், மறைமலைநகர்
பரிசுப் பொருளைக் கொடுக்க வந்தால், அதைப் பெறாமல் மறுத்து விட வேண்டும். ஆனால் இந்த பழக் கத்தை மாற்றுவதென்பது மிக மிகக் கடினம். இருந்தாலும் முயற்சித்தால் மாற்றம் கொண்டு வர முடியும். லஞ்சம் பரவிக் கிடக் கும் காலகட்டத்தில், பணத்தையும், பொருளை யும் வேண்டாம் என மக்கள் சொல்லிவிட மாட்டார்கள். ஆகவே, இதைத் தடுக்க தனி மனித ஒழுக்கம் தேவை. அத்துடன் அரசாங் கம் முன்னெடுக்கக் கூடிய நடவடிக்கைகள் மிக மிக அவசியம். தவறு செய்பவர்களைக் காட்டிக் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், தகவல் கொடுப்பவர் ரகசியங் கள் காக்கப்படும் என்ற நம்பிக்கையை முத லில் தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண் டும். அதேபோல பணம் கொடுத்தவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றவர் களுக்கு பாடமாக இருக்க வேண்டும். அந்த தண்டனைச் செய்தி அனைத்து தரப்பிலும் சென்றடையும் வகையில் விளம்பரப்படுத் தப்பட வேண்டும்.
பெயர் வெளியிட விரும்பாத வாசகர்
என்னுடைய ஓட்டு விற்பனைக்கல்ல என்று மக்களாகவே தீர்மானித்து பணம் வாங்க மறுத்தால்தான் இதை மாற்ற முடியும். பணம் கொடுப்பவர்களை பிடித்துக் கொடுப்பது எல்லாம் சாத்தியமானதல்ல. எங்களுக்கு பணம் தேவையில்லை, நாளை பதவிக்கு வந்தவுடன் எங்களுக்காக பணியாற்றுங்கள், நாட்டுக்கு சேவை செய்யுங்கள் என்று சொல்ல வேண்டும்.
இந்த வாரத்துக்கான தலைப்பு:
வாக்குக்காக பணமோ, ‘பரிசு’ பொருளோ அளிக்க அரசியல் கட்சிகள் தேடி வந்தால்... அவர்களை மக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஓட்டுக்கு ‘லஞ்சம்’ கொடுப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த சாமானிய மனிதர்களால் முடியுமா? அதிலுள்ள பிரச்சினைகள் என்னென்ன? நடைமுறையில் செயல்படுத்தக் கூடிய வகையில் யோசனைகளைச் சொல்லுங்கள்...
நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044 42890002 எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
15 days ago
மற்றவை
22 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
6 months ago