இமாமி டியோடரண்ட்
அழகு சாதனப் பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இமாமி நிறுவனம் முதல் முறையாக டியோடரண்ட் தயாரிக்கிறது. இதன் மூலம் ரூ. 2,000 கோடி விற்பனை சந்தை வாய்ப்புள்ள இப்பிரிவில் இரு ஆண்டுகளில் 7 சதவீத சந்தையைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த இந்நிறுவனம் `ஹி’ என்ற பெயரில் டியோடரண்ட் தயாரித்துள்ளது. இதற்கு விளம்பர தூதராக ஹிருத்திக் ரோஷன் நியமிக்கப்பட்டுள்ளார். 6 நறுமணங்களில் இது வெளிவந்துள்ளது. தென்னிந் தியாவில் விரைவில் இது விற்பனைக்கு வர உள்ளது.
டெல் துணைத் தலைவர் கணேஷ் மூர்த்தி
டெல் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக (சிஎப்ஓ) இவிபி கணேஷ் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு மெபாசிஸ் நிறுவனத்தில் செயல் துணைத் தலைவராக பணியாற்றினார்.
பெங்களூரிலிருந்து செயல்படும் இவர், மூத்த துணைத் தலைவர் மற்றும் சிஎப்ஓ தாமஸ் ஸ்வெட்டுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஹியூலெட் பக்கார்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான மெபாசிஸ் நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார். அதற்கு முன்பு ஹியூலெட் பக்கார்ட் குளோபல்சாஃப்ட் நிறுவனத்தின் நிதி இயக்குநராக பணிபுரிந்து வந்தார்.
கொரியாவுடன் ஆர்பிஐ ஒப்பந்தம்
பாரத ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தென் கொரியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி தகவல்களை கொரியா அளிக்கும்.
மேலாண்மை கூட்டுறவு மற்றும் பரிமாற்ற ஒப்பந்தத்தில் கொரிய குடியரசு மற்றும் ஆர்பிஐ கையெழுத்திட்டுள்ளது. கொரியாவின் எப்எஸ்சி அமைப்பின் தலைவர் ஜே யூ ன் ஷின் மற்றும் ஆர்பிஐ துணை கவர்னர் ஆர். கான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
முக்கிய செய்திகள்
மற்றவை
11 days ago
மற்றவை
19 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago