இந்த வாரத்துக்கான தலைப்பு:
வேட்பாளர்கள் கும்பிட்ட கரங்களுடன் வீதி வீதியாக வந்து வாக்கு சேகரிக்க ஆரம்பித்து விட்டார்கள். உங்களைத் தேடி வரும், உங்கள் தொகுதி வேட்பாளர்களிடம் நீங்கள் முக்கியமாக என்ன கேள்வி கேட்பீர்கள். அதற்கு அவர் தரும் எந்த பதில் உங்களை திருப்திபடுத்தும். கேள்வியையும் பதிலையையும், ஏன் இந்த கேள்வி என்ற காரணத்தோடு கூறி பதிவு செய்யுங்கள்.
எச்.பாஷா, அரும்பாக்கம்
என்னிடம் வாக்கு கேட்டு வரும் வேட் பாளர்களிடம், கடந்த மழை வெள்ளத்தின் போது நீங்கள் எல்லாம் எங்கே சென்றீர்கள் என்றும், இரண்டாவது கேள்வியாக எங்கள் பகுதியில் உள்ள எம்எம்டிஏ காலனி பிரதான சாலையில் உள்ள ஆவின் பால் பூத் பேருந்து நிறுத்தத்தில் இதுவரை நிழற்குடை அமைக்காதது ஏன்? என்றும் கேட்பேன். இந்தக் கேள்விகளுக்கு யார் ஒழுங்காக பதில் கூறுகிறார்களோ அவர்களுக்கே வாக்களிப்பேன்.
நந்தகோபாலன், ராமாபுரம்
வாக்கு கேட்டு வரும் வேட்பாளரிடம், நான் சமூகநல சேவை செய்ய வருகிறேன், தவறான வழியில் பணம் சம்பாதிக்க மாட் டேன் என்ற உறுதிமொழியை அவர் தருவ தாக இருந்தால் அவருக்கு வாக்களிப்பேன். சரியான வேட்பாளர் சரியான உறுதிமொழி யைக் கூறினால் அவர் நல்ல வேட்பாளராக இருப்பார்.
பா.தங்கராஜ், கிண்டி
தற்போது அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு வீடு, வீடாக வந்து கொண்டிருக்கிறார்கள். குட்டி, குட்டி சந்துகளையும் கண்டுபிடித்து வந்து விடுகின்றனர். இப்போது வீடு, வீடாக வருபவர்கள் வெற்றிபெற்ற பின்பும் வருவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதனால் ஓட்டுக் கேட்டு வரும் வேட்பாளரிடம், இதேபோல் வெற் றிக்கு பின்னரும் தொகுதி சார்ந்த பிரச்சினைகள் குறித்து பேச தொகுதி மக்களை மாதத்துக்கு ஒரு முறையாவது சந்திக்க வருவீர்களா? என்ற கேள்வியை கேட்பேன். ஓட்டு கேட்டு வரும்போது மட்டும் உங்கள் வீட்டு பிள்ளை என்று சொல்லும் நீங்கள், வெற்றி பெற்ற பின்பு தொகுதியின் நலனை, பிரச்சினைகளை தீரத்தோடு சட்டசபையில் பேசுவீர்களா? எனக் கேட்பேன். இந்த 2 கேள்விகளுக்கும் திருப்தியான பதில் அளிக்கும், அந்த பதிலின் மூலம் நம்பிக்கை அளிக்கும் வேட்பாளருக்கு இந்த தேர்தலில் எனது வாக்கை அளிப்பேன்.
ஜவஹர், முகலிவாக்கம்
நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப் பேரவைக்கு சென்று விட்டால் எவ்வ ளவு கால இடைவெளியில் எங்களை சந்திப்பீர்கள்? அப்படி சந்திக்காவிட்டால் என்ன செய்வது. இப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லா மக்களை யும் அந்தந்த தொகுதிகளில் சந்திப்பதற்கு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க அரசுக்கு தூண்டுகோலாக இருப்பீர்களா. அப்படி அரசு எடுக்க முன்வரா விட்டால் நீங்களாவது ஒரு தனிநபர் மசோதா கொண்டுவர முன்வருவீர்களா? என எங்கள் பகுதிக்கு வரும் வேட்பாளரிடம் கேட்பேன்.
எஸ்.ஏ.பிச்சை, காஞ்சிபுரம்
ஒரு வேட்பாளர் ஓட்டு கேட்டு வரும் போது, அவரிடம் நீங்கள் இப்போது ஓட்டுக்காக எங்களைத் தேடி வந்துள்ளீர்கள். உங்களுக்கு நாங்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்தால் உங்களை இப்போது போல் மீண்டும் பார்க்க முடியுமா? அணுகுவதற்கு எளிமையாக இருக்குமா? என்ற வினாவைத்தான் முதலில் கேட்பேன். அதற்கு அவர் சுயநலம் இல்லாமல் பொதுநலம் மட்டுமே நோக்கமாகக் கொண்டு தொகுதி மக்கள் தேடி வரும் போது 24 மணி நேரமும் என் வீட்டுக் கதவு எப்போதும் திறந்திருக்கும் என பதில் சொல்லும் வேட்பாளருக்குத்தான் வாக்களிப்பேன்.
ஜோதிகுமார், செங்கல்பட்டு
எனது தொகுதி வேட்பாளரிடம் நான் கேட்க விரும்புவது, நீங்கள் வெற்றிபெற்றால் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் ஒரு வாரத்தில் உங்களை எத்தனை முறை சந்திக்கலாம் என்பதே ஆகும். அதற்கு அவரின் பதில், வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது இருப்பேன் என்று கூறினால் திருப்தியாக இருக்கும். ஏனெனில் தொகுதி சம்பந்தமாகவோ, எனது ஊர் சம்பந்தமாகவோ கேள்வி எழுப்ப, கோரிக்கை எழுப்ப ஏற்ற இடம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகமே ஆகும். அங்கு எவ்வித குறுக்கீடுகளும் கூடாது. ஆனால் இதெல்லாம் நடக்குமா என்பது ஐயமாகவே உள்ளது.
ஜெகநாதன், ராயப்பேட்டை
தேர்தலுக்காக வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் படிப்பு, தொழில், தொகுதி வளர்ச்சிக்கு கைவசம் வைத்திருக்கும் திட்டம், லஞ்சம் வாங்க மாட்டேன் என்ற உறுதிமொழி, இதுவரை செய்துள்ள பொதுச் சேவைகள் குறித்து கேட்பேன்.
தொகுதிக்கு சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, சுற்றுப்புற மேம்பாட்டுக்கான திட்டங் களை அவர் வைத்திருந்தால் அவருக்கு வாக்களித்து தேர்வு செய்யலாம். லஞ்சம் வாங்கமாட்டேன் என நிச்சயமாக வேட்பாளர் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண் டும். ஆனால் ஒரு வேட்பாளர் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, கட்சி மாறுகிறார் என்றால், அதற்கு முன்பாக தனது பதவியை அவர் கண்டிப்பாக ராஜினாமா செய்திருக்க வேண்டும். அதற்கு வேட்பாளர் உறுதியளித்தால் திருப்தியடைய முடியும்.
நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
15 days ago
மற்றவை
22 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
6 months ago