உங்கள் குரல்: அடிப்படை தேவைகள் இல்லாத அரசுப் பள்ளி

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அடிப்படை தேவைகள் இல்லை என்று உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘தி இந்து- உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த முத்துக் குமாரசாமி என்பவர் கூறியதாவது:

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்டது புல்லரம்பாக்கம் ஊராட்சி. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் இந்த ஊராட்சியில் 1974-ம் ஆண்டு முதல் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை மட்டுமே கடந்த பல ஆண்டுகளாக செயல்படுகின்றன. மற்ற வகுப்புகள் ஏதும் செயல்படவில்லை. மேலும் சுற்றுச்சுவர், சுத்தமான கழிவறை கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளும் இல்லை.

இதன் காரணமாக கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்துவந்த இப்பள்ளியில் இப்போது 25 பேர் மட்டுமே படிக்கிறார்கள். எனவே இப்பள்ளியில் அடிப்படை தேவை களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, கல்வித்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம் என்றார்.





மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்குவதில் தாமதம்

மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக வாசகர் ஒருவர் உங்கள் குரலில் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான நவுசத் என்பவர் ‘தி இந்து உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு கூறியதாவது:

நான் பெற்றோர் இன்றி ஆதர வற்ற நிலையில், 80 சதவீத ஊனத் துடன் இருக்கிறேன். கடந்த 2014-ம் ஆண்டு மயிலாப்பூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி உதவித்தொகை கேட்டு விண்ணப் பித்திருந்தேன். பல மாதங்கள் ஆகியும் எனக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. இதுகுறித்து அலுவலகத்தில் கேட்டபோது, விண்ணப்பம் தொலைந்துவிட்டதாக வும், மீண்டும் விண்ணப்பிக்குமாறும் கூறினர். இதைத்தொடர்ந்து மீண்டும் விண்ணப்பித்தேன். இதுவரை எனக்கு உதவித்தொகை கிடைக்க வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்ட போது, “அந்த பயனாளியின் நிலை அறிந்து, அவரது இருப்பிடத்துக்கே அலுவலர்களை அனுப்பி, உதவித் தொகை பெற தகுதியுடையவர்தான் என சான்றளித்து, அவருக்கு உதவித்தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கோப்பு களை அனுப்பியிருக்கிறோம்.

குடிசைப்பகுதிகளில் வசிப் போரை மாநகராட்சி சார்பில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப் போர் பட்டியலில் சேர்த்து அதற் கான எண் வழங்கப்படுகிறது. இந்த பயனாளி, அதுபோன்ற பகுதியில் வசிக்காதவர் என்பதால், இவருக்கு, வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்போருக்கான எண் கிடைக்கவில்லை. அந்த எண் இருந் தால் மட்டுமே உதவித்தொகை வழங்க முடியும். அந்த எண்ணை வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில், மாநகராட் சிக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த எண் கிடைத்தவுடன் அவருக்கு உதவித்தொகை வழங்கப்படும்” என்றனர்.





நங்கநல்லூர் பஸ்நிலையத்தில் மூத்த குடிமக்கள் பஸ் பாஸ் பெற வழிசெய்ய வேண்டும்

நங்கநல்லூர் பஸ் நிலையத்தில் மூத்த குடிமக்கள் பஸ் பாஸ் பெற மாநகர போக்குவரத்து கழகம் வழிவகை செய்ய வேண்டுமென அப்பகுதி முதியோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மூத்த குடிமக்கள் கே.ஆர்.கிருஷ்ணன், வி.ராமாராவ் ஆகியோர் ‘தி இந்து’வின் உங்கள் குரல் சேவை வழியாக கூறியிருப்பதாவது:

முதல்வர் அறிவித்துள்ள முதியோருக்கான இலவச பஸ் பாஸ் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நங்கநல்லூரில் ஏஜிஎஸ் காலனி, எம்எம்டிசி காலனி, எஸ்பிஐ காலனி, லட்சுமிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த முதியோர்கள் ஆலந்தூர் பணிமனையில்தான் மூத்த குடிமக்கள் பஸ் பாஸ் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடுமையான வெயிலில் சுமார் 3 கி.மீ செல்ல வேண்டியுள்ளது. தற்போது, நிரந்தர அடையாள அட்டை பெற சென்றா லும்.

பிறகு, மாதந்தோறும் பஸ் பாஸ் வாங்க செல்ல வேண்டியுள்ளது. இதனால், எங்களை போன்ற மூத்த குடிமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். எனவே, போதுமான இடவசதியுள்ள நங்கநல்லூர் பஸ் நிலையத்திலும் இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், சுமார் 10 ஆயிரம் முதியோர் பயனடைவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நங்கநல்லூர் பகுதி முதியோர்களின் கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆய்வு நடத்தப்படும். பின்னர், இறுதி முடிவு அறிவிக்கப்படும்’’ என்றனர்.





அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

14 days ago

மற்றவை

22 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

6 months ago

மேலும்