கார்கில் போர், பாபர் மசூதி இடிப்பு என்று நெஞ்சை உலுக்கிய பல நிகழ்வுகளை களத்தில் நேரடியாக நின்று தனது ஒளிக்கருவியால் படம்பிடித்தவர் பி.கே.மோகன் எனப்படும் பி.கசமுத்து மோகன். டெல்லியில் என்டிடிவி தொலைக்காட்சியில் உதவி கேமராமேனாக சேர்ந்து, பிறகு தலைமை கேமராமேனாக பணிபுரிந்த அனுபவத்தோடு தற்போது ‘புதிய தலைமுறை’ செய்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவின் துணைத் தலைவராக உயர்ந்திருக்கிறார். அவரிடம் உரையாடியதில் இருந்து..
நேரடியாக டெல்லி மீடியாவுக்கு எப்படி போனீர்கள்?
எனக்கு பூர்வீகம் நாகர் கோவில் அருகே உள்ள பூதப் பாண்டி. தொடர்ந்து படிக்க முடியாததால் 17 வயதில் டெல் லிக்கு புறப்பட்டுச் சென்றேன். அப்போது தனியார் சேனல்கள் கிடையாது. மீடியா வேலை என்றாலே, தூர்தர்ஷன் சேன லுக்கு செய்தி சேகரித்துக் கொடுப்பதுதான் பிரதான பணி. 1988-ல் என்டிடிவி தொடங்கினார் கள். அப்போது, ‘ஸ்டார் நியூஸ்’, ‘இந்தியா டுடே’ போன்ற நிறு வனங்கள் சேனல் நிகழ்ச்சிகளை தயாரித்து கொடுக்க முன்வந்தன. அங்கு உதவி கேமராமேன் வேலையில் சேர்ந்தேன்.
பணி அனுபவம் எப்படி இருந்தது?
செய்தி சேகரிக்கும் பணியில் தொடர்ந்து 26 ஆண்டுகளாக இருந்துவருகிறேன். அதுவே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆரம் பத்தில் ‘தி வேர்ல்டு திஸ் வீக்’ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி செய்தோம். 30 நிமிட நிகழ்ச்சிக்கு 4 நாடுகள் சென்று ஷூட் செய்வோம். அந்த அனுபவம் எல்லாம் இப்போது நினைத்தாலும் பிரமிப்பாக உள்ளது.
ஒளிப்பதிவாளராக இருந்த உங்களுக்கு நிகழ்ச்சி தயாரிப்பை ஒருங்கிணைத்து நடத்தும் அனு பவம் எப்படி கிடைத்தது?
சீனியர் கேமராமேனாக இருந்ததால் படைப்பாற்றல் இயல்பாகவே வந்தது. ஒரு நிகழ்ச்சியை ஷூட் செய்யப் போகிறோம் என்றால் அது சார்ந்த சிந்தனைகள் உள்ளுக் குள் ஓடிக்கொண்டே இருக்கும். அதுவே ஒரு கட்டத்தில், நிகழ்ச்சி களை நானே கையில் எடுக்கும் அளவுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.
கேமராமேனாக இருந்ததற்கும், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து அதன் இயக்குநராக இருப்பதற்கும் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?
இரண்டுக்கும் நிறைய வித் தியாசம் உண்டு. ஒரு நிகழ்ச் சியை சோர்வடையாமல் கொண்டு செல்ல குழு ஒத்துழைப்பு நிறைய தேவை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக, அது எனக்கு நிறையவே கிடைத்திருக் கிறது. அது எனக்கு பலம்.
கார்கில் போர், பாபர் மசூதி இடிப்பு போன்ற சம்பவங்களின்போது அங்கு இருந்த உங்களுக்கு அது வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்குமே?
வட இந்தியாவில் வேலை பார்ப்பதே ஒரு த்ரில்லான அனு பவம்தான். தேர்தல் வேலைக்காக ஒருமுறை சத்தீஸ்கருக்கு சென்றபோது காரை வழிமறித்து 2 பேர் அழைத்துச்சென்றனர். ‘யார் நீங்கள்? எங்கே இருந்து வருகிறீர்கள்?’ இதுதான் அவர்கள் கேட்ட கேள்வி. மறுநாள் எங்களை விடுவிடுத்தனர். அவர்கள் நக்ஸலைட் என்பது பின்னர்தான் தெரிந்தது. ‘மீடியா ஆட்கள். இந்த வேலைக்காக செல்கிறோம்’ என்று உண்மையை சொன்னதால் உயிர் பிழைத்தோம். கார்கில் போரின்போது கேமரா வில் ஷூட் செய்வதை உடனே கொண்டுபோய் சேர்க்க முடி யாது. சமைப்பதை சாப்பிட முடியாது என்பதுபோன்ற நிலை இருந்தது. பாபர் மசூதி சம்பவத் தின்போது உயரத்தில் இருந்து கொண்டு ஷூட் செய்கிறோம். 15 அடிக்கு கீழே ரெக்கார்டர் விழுகிறது. எடுக்க முயற்சிக்கும் நேரத்தில் கால் வெட்டுப்பட்டு பெரிய அளவில் காயமானது. அந்த நேரத்தில் 3 நாட்கள் மருத்துவமனையே இல்லை. காயத்தோடுதான் இருந்தேன்.
துபாய் சென்றபோது பெனசிர் புட்டோ நேர்காணல் கொடுத்தார். அந்த சந்திப்பின்போது மகிழ்ச்சி யோடு எங்களுக்கு சாக்லேட் கொடுத்தார். அந்த சாக்லேட்டை கொண்டுவந்து வீட்டில் ஃப்ரிட் ஜில் வைக்கிறேன். அவர் பாகிஸ் தானில் கொல்லப்பட்டதாக செய்தி வருகிறது. இப்படி வலி நிறைந்த அனுபவங்கள் நிறைய உள்ளன.
என்டிடிவி-யில் இருந்து புதிய தலைமுறைக்கு வந்தது எப்படி?
உதவி கேமராமேன் பொறுப் பில் இருந்த என்னை தலைமை கேமராமேன் பொறுப்புக்கு உயர்த்திய சேனல் என்டிடிவி. யார் புதிதாக சேனல் தொடங்கினாலும், அதில் கட்டாயம் என்டிடிவியின் பங்கு இருக்கும். ஒரு சேனல் தொடங்குகிறார்கள் என்றால் அவர்கள் என்டிடிவி மாதிரியான அனுபவம் நிறைந்த சேனலை அணுகுவார்கள். அப்படி பல அனுபவங்களோடு டெல்லியில் இருந்த நாட்களில் நிறைய மெகா ஷோக்கள் நடத்தியிருக்கிறேன். ‘இதை மோகன் செய்தால் சிறப்பாக இருக்கும்’ என்று பெயர் கிடைத்தது. புதிய தலைமுறை சேனலுக்கும் கிராஃபிக்ஸ் உள் ளிட்ட தொழில்நுட்ப விஷயங் களை என்டிடிவி செய்துகொடுத் தது. ‘தமிழன் விருதுகள்’ என்ற நிகழ்ச்சியை புதிய தலைமுறை யில் தொடங்கினார்கள். அதற் காகத்தான் 2012-ல் உள்ளே வந்தேன். எந்த வேலையாக இருந்தாலும் முழு சுதந்திரமும், வேலைக்கான அங்கீகாரமும் முக்கியம். அது அதிகம் இருப் பதால் இங்கேயே தங்கிவிட்டேன்.
சமீபத்தில் ‘தி இந்து’, ‘அகரம்’, ‘புதிய தலைமுறை’ இணைந்து நடத்திய ‘யாதும் ஊரே’ நிகழ்ச்சி யின்போது, பசும் காடு போன்ற அரங்க பின்னணி உள்ளிட்ட விஷ யங்களை சிறப்பாக ஒருங் கிணைத்து பாராட்டுகளை குவித் திருக்கிறீர்களே?
‘இந்தியன் ஆஃப் தி இயர்’, ‘கிரீனத்தான்’ உள்ளிட்ட மெகா ஷோக்களை டெல்லியில் செய்திருக்கிறேன். அந்த அனு பவம் இருந்ததால் இந்த நிகழ்ச்சியையும் புதுமையாக செய்ய முடிந்தது. சீனியர் பொறுப்பில் இருக்கும்போது ஒருவர் தன் குழுவினரை களத்தில் இறக்கி வேலை செய்ய வைத்துவிட்டு அதை எப்படி செய்கிறார்கள் என்பதை தூரத்தில் இருந்து ரசிக்கலாம். நான் அவ்வாறு செய்வதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கான ‘தீம்’, அடிப்படைக் கருத்து என்ன என்பதை புரிந்துகொண்டு, அதில் இடம்பெறும் அனைத்து பொருட்களும் அந்த கருத்தை சார்ந்தே இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இதுபோல கவனித்துச் செய்வதால்தான் நல்ல பெயர் எடுக்க முடிகிறது.
குடும்பம், குழந்தைகள் பற்றி..?
மனைவி, குழந்தைகள் டெல்லியில் இருக்கிறார்கள். மாதந்தோறும் சில நாட்கள் மட்டும் போய்விட்டு வருகிறேன். செய்தித் துறையை என் வாழ்க்கையாக தேர்ந்தெடுத்திருக்கிறேன். இது தான் என் பிரதான வாழ்க்கை. சொந்த வீட்டின் மீது அதிகம் கவனம் செலுத்த முடியாது. இந்த துறைக்கு வந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இத்துறைக்கு வரும் அனைவரிடமும் சொல்கிறேன். வேலைக்குப் பிறகுதான் எல்லாம். என் வீட்டிலும் அந்த சுதந்திரத்தை கொடுத்திருப்பதால், மகிழ்ச்சி யாக, வேகமாக என் வேலையில் ஓடிக்கொண்டிருக்கிறேன்.
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
20 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago