புதிய இடத்திற்குச் செல்லும்போது எதிரே வரும் ஒவ்வொருவரிடமும் வழி கேட்டு, வழி கேட்டுப் போவோம். குறிப்பிட்ட இடத்தை அடைவதற்குள் தொண்டைத் தண்ணி வற்றிவிடும். யாரிடமும் கேட்காமல் நாமே செல்ல வழியே இல்லையா எனத் தோன்றும். இப்போது அதற்கு வழி வந்துவிட்டது. ஜிபிஎஸ் தொழில்நுட்பம் தானே என்கிறீர்களா? அதுதான், ஆனால் அது மட்டுமே அல்ல. அதனுடன் இணைந்து பார்வையற்றவருக்கும் வழிகாட்டும் ஒரு ஷூ. இன்ஜினியரான கிரிஸ்பியன் லாரன்ஸும், அனிருத் ஷர்மாவும் இதை வடிவமைத்துள்ளனர்.
டுயூசர் டெக்னாலஜி (Ducere technology) என்னும் நிறுவனத்தை உருவாக்கி இதைத் தயாரிக்கின்றனர். இது ஷு, இன்சோல் ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இன்சோல் என்பது ஷூவின் அடிப்பாகத்தில் செருகும் வசதியைக் கொண்டிருக்கும். எந்த ஷூவிலும் இதைப் பொருத்திக்கொள்ள இயலும். இதை கடந்த மார்ச் 7 அன்று மும்பையில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
புளூடூத் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ஷூவுக்கு லேச்சல் என்று பெயரிட்டுள்ளனர். லேச்சல் (Lechal) என்றால் இந்தியில் ‘என்னை அங்கே கொண்டு போ’ என்று பொருள். இந்த ஷூ செயல்படத் தேவையான அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் நிறுவிவிடுகிறார்கள். இதன் மூலம் எங்கே செல்ல வேண்டுமோ அந்த இடத்தைச் சொன்னாலே போதும் ஜிபிஎஸ் உதவியுடன் அந்த இடத்திற்கு ஷூ வழிகாட்டும். எப்படி என்கிறீர்களா? இடது புறம் திரும்ப இடது கால் ஷூவும், வலது புறம் திரும்ப வலது கால் ஷூவும் வைப்ரேட் ஆகும். இதன் மூலம் மிக எளிதாகப் பார்வையற்றவர்கூட தான் செல்ல வேண்டிய இடத்தை அடைந்துவிட முடியும். பார்வையற்றோருக்கு உதவும் வகையில்தான் இதை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஒரு செட் ஷூ அல்லது ஒரு செட் இன்சோல், ஒரு சார்ஜர், ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் ஆகியவை ஒரு செட்டாக கிடைக்கின்றன. விலை சுமார் ரூ.6,000. இந்த அப்ளிகேஷனை ஸ்மார்ட்போன்களில் நிறுவிக்கொண்டால் போதும். இந்த ஷூவை உடற்பயிற்சிக்கும் பயன்படுத்த முடியும். எவ்வளவு கலோரி அதிகமாக உள்ளதோ அதற்குத் தகுந்தாற்போல் எத்தனை அடிகள் நடக்க வேண்டுமோ அல்லது ஓட வேண்டுமோ அதை எளிதாக தீர்மானித்துக்கொள்ளலாம். தேவையான அளவு நடந்த உடன் வைப்ரேட்டர் போதும் என நினைவுறுத்தும். ஆந்திராவில் இதை இந்த பொறியாளர்கள் உருவாக்கி யுள்ளார்கள், ஆனாலும் அவர்கள் அமெரிக்க சந்தையைக் குறிவைத்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
2 days ago
மற்றவை
5 days ago
மற்றவை
6 days ago
மற்றவை
17 days ago
மற்றவை
22 days ago
மற்றவை
29 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago