நாடு முழுவதும் 40 ஆயிரம் ‘நிர்பயா’க்கள்: அதிகரிக்கும் பலாத்கார குற்றங்கள்; தப்பிக்கும் குற்றவாளிகள் - வர்மா கமிட்டி பரிந்துரைகள் முழுமையாக அமலுக்கு வருமா?

By ஆர்.பாலசரவணக்குமார்

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் 2012-ல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகாவது, பலாத்கார சம்பவங்கள் குறைந்துள்ளதா என்றால் கேள்விக்குறியே. சமீபத்திய சாட்சி, டெல்லியில் 14 வயது பள்ளி மாணவி மற்றும் 7 வயது சிறுமி ஆகியோர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்கள்.

பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது நிர்பயா சம்பவத்துக்குப் பிறகே. 2013-ல் தனிச்சட்டமும் இயற்றப்பட்டு வர்மா கமிட்டி பரிந்துரைகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பாக தலைநகரான டெல்லியில் அதிகரித்து வருகிறது.

தேசிய குற்றப்பதிவு ஆவண அறிக்கையின்படி (என்சிஆர்பி), நாடு முழுவதும் கடந்த ஆண்டு 37,681 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் மத்தியப் பிரதேசம் (5,076), ராஜஸ் தான் (3,759), உத்தரப் பிரதேசம் (3,467), மகாராஷ்டிரம் (3,488), அசாம் (1,980) ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. தமிழகத் தில் கடந்த ஆண்டு 1,110 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள் ளன. 7 யூனியன் பிரதேசங்களில் தலைநகர் டெல்லியில்தான் அதிக மான பலாத்காரங்கள் நிகழ்ந்துள் ளன. அதிகபட்சமாக டெல்லியில் 2,096 பலாத்கார வழக்குகள், குறைந்தபட்சமாக லட்சத்தீவில் ஒரு வழக்கு பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஆண்டில் 6 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் 524 பேர், 6 முதல் 18 வயது வரை யிலான இளம்பெண்கள் 13,578 பேர், 18 வயது முதல் 60 வயது வரையிலான பெண்கள் 22,782 பேர், 60 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகள் 84 பேர் பலாத்காரத்துக்கு ஆளான தாக என்சிஆர்பி சுட்டிக்காட்டியுள் ளது.

40 ஆயிரத்தை தாண்டியது

2011-12-க்கு பிறகு பலாத்கார சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2011-ல் 24,206 சம்பவங்கள், 2012-ல் 24,923, 2013-ல் 33,707 சம்பவங்கள் நடந்துள்ளன. 2014-ல் இது 37,681 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, 2011-ல் நடந்ததைவிட சுமார் 13 ஆயிரம் அதிகம். 2015-ல் கடந்த அக்டோபர் 31-ம் தேதிக்குள் இந்த எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி விட்டது.

பலாத்கார குற்றங்கள் தொடர் பாக காவல் நிலையத்தில் புகார் கொடுப்பவர்கள் எண்ணிக்கை தற் போது கணிசமாக அதிகரித் திருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரம், வர்மா கமிட்டி பரிந்துரைகள் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை என் பதையும் இது காட்டுகிறது.

தலைநகரான டெல்லியில் பதி வாகும் பலாத்கார வழக்குகளில் 46 சதவீதம் வரை சிறுமிகள்தான் (மைனர் பெண்கள்) பாதிக்கப் படுகின்றனர் என்பதும், 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்கூட பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் அதிர்ச்சித் தகவல். சில நாட் களுக்கு முன்பு 14 வயது மாணவி யும், 7 வயது சிறுமியும் பலாத் கார சம்பவங்களால் பாதிக்கப் பட்டுள்ளனர். நிர்பயா சம்பவத்துக் குப் பிறகு, டெல்லியில் பள்ளி, கல் லூரிகள் மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கு அதிக அளவில் தற்காப்புக் கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கடந்த ஆண்டு மட்டும் 17,699 பேர் இப்பயிற்சி பெற்றனர். ஆனாலும், பலாத்கார சம்பவங்கள் குறையவில்லை.

இதுபற்றி, பெண் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலர்கள் கூறுவ தாவது: இந்திய அளவில் 2011-13 காலகட்டங்களில் பெண்களுக்கு எதிராக 82,836 குற்ற வழக்குகள் பதியப்பட்டு அதில் வெறும் 12,376 பேருக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. தென்இந்தியாவில் 12,414 வழக்குகள் பதியப்பட்டு, அதில் 998 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

‘வழக்கு பதியப்பட்ட 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தயாரிக்க வேண்டும். அதில் இருந்து 2 மாதத்துக்குள் விசாரணையை முடித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும்’ என்கிறது வர்மா கமிட்டி. ஆனால், பல பலாத்கார வழக்குகளில் இந்த விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. இந்த கால இடைவெளிதான் குற்றவாளி களுக்கு சாதகமாகி விடுகிறது. சட்டங்களை முறைப்படி செயல் படுத்தி, அதன் பிடியை இறுக்கினால் மட்டுமே, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்கின்றனர் ஆர்வலர்கள்.

தமிழகத்தில்..

குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கை விதையைத் தூவி அது மரமாவதற்கான வேலையையும் ‘வாண்டு பாண்டு’ பகுதி மூலம் நிறைவேற்றிவிட்டீர்கள். மழை கணக்கெடுப்பு வானிலை ஆய்வாளர்களுக்கே வெளிச்சம் என்று நினைத்திருந்தோம். மழை மானி பற்றிச் சொல்லி எங்களையும் மழைநீர் ஆக்கிவிட்டீர்களே! மிக்க நன்றி.

தமிழகத்திலும் பலாத்கார சம்பவங்களில் சிறுமிகளே அதிகம் பாதிக்கப்படுகின்ற னர். தமிழகத்தில் 2011-ல் 677 பலாத்கார வழக்குகள், 2012-ல் 737 வழக்குகள், 2013-ல் 923 வழக்குகள், 2014-ல் 1,124 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 60 சதவீதம் பேர் சிறுமிகள் என்பது வேதனை கலந்த உண்மை. பெண்களுக்கு எதி ரான வழக்குகளைப் பொருத்த வரை, இந்திய அளவிலான வழக்குகளில் தமிழகத்தின் பங்கு 3 சதவீதமாக உயர்ந் துள்ளது.

தெரிந்தவரால் ஆபத்து அதிகம்

மனிதர்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க தூக்கம் அவசியம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், நாம் ஏன் தூங்குகிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா? தூங்கும்போதுதான் நம்முடைய உடல் தன் செயல்பாடுகளைச் சீராக்கிக்கொள்கிறது. ஏனென்றால், நாம் விழித்திருக்கும் நேரத்தைவிடத் தூங்கும்போது நம் இதயத் துடிப்பு, சுவாசம், உடலின் பிற உறுப்புகளின் செயல்பாடுகள் மெதுவாக இருக்கும். ஆனால், இதற்கு மூளை மட்டும் விதிவிலக்கு. மூளை நாம் தூங்கும்போதுதான் அதிக விழிப்புடன் செயல்படும். அந்த நேரத்தில்தான் அது தன் அனுபவங்களை உள்வாங்கிக்கொள்ளும். தான் ஏற்கெனவே கற்றுக்கொண்ட விஷயங்களைத் தொகுக்கும். அது மட்டுமல்லாமல், தேவையில்லாத தகவல்களையும் இரவில் நாம் தூங்கும்போதுதான் நம் நினைவில் இருந்து அழிக்கும்.

பெண்களிடம் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவோர் 1,000 பேர் எனக் கொண்டால், அதில் 7 பேர் தந்தை உள்ளிட்ட நெருங்கிய குடும்ப உறவுகள், 98 பேர் உறவினர்கள், 263 பேர் அக்கம்பக்கத்தினர், 531 பேர் முகம் தெரிந்தவர்கள், எஞ்சிய 101 பேர் அடையாளம் தெரியாத வெளிநபர்கள். ஆக, பெரும்பாலான பலாத் கார குற்றங்கள் அறிமுகமானவர்களாலேயே நடக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

1 day ago

மற்றவை

1 day ago

மற்றவை

4 days ago

மற்றவை

5 days ago

மற்றவை

16 days ago

மற்றவை

21 days ago

மற்றவை

28 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மேலும்