உங்கள் குரல்: பேராசிரியர்,விரிவுரையாளர் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும்

அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரை யாளர் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை அரசு விரைவில் வெளியிட வேண்டும் என்று ‘தி இந்து’ உங்கள் குரலில் பொறியியல் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களும், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 139 பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களை தேர்வு செய் வதற்கான அறிவிப்பினை தேர்வு வாரியம் வெளியிட்டது.

அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் முதுநிலை பொறியியல் பட்டதாரிகள் ஏமாற் றம் அடைந்துள்ளனர். அதேபோல், அரசு பாலிடெக்னிக் கல்லூரி களில் 604 விரிவுரையாளர்கள் நியமனமும் அறிவிப்பு நிலை யிலேயே உள்ளது. எனவே போட்டித்தேர்வை அரசு விரைவில் நடத்த வேண்டும் என்று பொறியியல் பட்டதாரிகள் ‘தி இந்து’ “உங்கள் குரல்” சேவை மூலம் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதியிடம் கேட்டபோது, “அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசிரியர்களையும், அரசு பாலிடெக்னிக்குகளில் 604 விரிவுரையாளர்களையும் நியமிப்பதற்கான காலியிடங்கள் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முன்பே ஒப்படைக்கப் பட்டுள்ளது. போட்டித் தேர்வுக்கென தனி இணை இயக்குநர் நியமனம், தேர்வு செலவினங்கள் தொடர்பான அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுகிறோம் என்று சொல்லியுள் ளோம். எனவே, விரைவில் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடலாம்” என்று தெரிவித்தார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

8 days ago

மற்றவை

15 days ago

மற்றவை

21 days ago

மற்றவை

30 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்