மக்களும், ஊடகமும் இணைந்தால் மாற்றத்தை உண்டாக்க முடியும்: திரைப்பட இயக்குநர் சேரன் நம்பிக்கை

வாசகர் திருவிழா 2015 | திருச்சி

மக்களும், ஊடகமும் இணைந்தால் மாற்றத்தை உண்டாக்க முடியும் என்றார் திரைப்பட இயக்குநர் சேரன்.

‘தி இந்து’ 2 ஆண்டுகளை நிறைவுசெய்து 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வாசகர்களுக்கான ‘தி இந்து’ வாசகர் திருவிழா திருச்சியில் நேற்று மதி இந்திராகாந்தி கல்லூரியின் வித்யா சேவா ரத்னம் கே.சந்தானம் அரங்கில் நடைபெற்றது.

விழாவில், திரைப்பட இயக்குநர் சேரன், ‘ஆய்வுரைத் திலகம்’ முனைவர் அ.அறிவொளி, கவிஞர் சல்மா, ‘ஞானாலயா’ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று உரையாற்றினர்.

விழாவில், ‘தி இந்து’ வெளி யீடான பி.ச.குப்புசாமி எழுதிய ‘ஜெயகாந்தனோடு பல்லாண்டு’ என்ற புத்தகத்தை திரைப்பட இயக்குநர் சேரன் வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண் டனர். விழாவில், சேரன் பேசிய தாவது:

காலையில் எழுந்தவு டன், ‘தி இந்து’வை முழுமையாகப் படித்து முடிக்கும்போது, சுத்தமான காற்றை உள்வாங்குவதாக உணர்கிறேன். நல்ல சிந்தனை, தேடலை ‘தி இந்து’ என்னிடம் உருவாக்கியுள்ளது.

தற்போது பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை அபாயச் செய்திபோல சொல்லி பயமுறுத்தாமல் மீண்டும் இதுபோன்ற பாதிப்புகள் நிகழாமல் காத்துக்கொள்வது குறித்த தீர்வுகளையும் சொல்கிறது ‘தி இந்து’.

சாதனையாளர்களைப் பற்றி மட்டும் செய்தி வெளியிடாமல், தோற்றவர்களைப் பற்றியும் எழுத வேண்டும். அப்போதுதான், அதன் மூலம் கிடைக்கும் தோல்விக்கான காரணங்களை அறிந்துகொண்டு, வேறுயாரும் அதுபோன்ற தவறுகளைச் செய்யாமல் இருக்க வழி கிடைக்கும். குழந்தைகளை தினமும் ‘தி இந்து’வை வாசிக்கச் செய்யுங்கள். அப்போதுதான், நம்முடைய ஊரின் செயல்பாடுகள், பிரச்சினைகள் குறித்து அவர்களுக்குத் தெரியும். முதலில் அவர்களுக்கு சிரமமாக இருக்கும். ஆனால் படிக்க, படிக்கப் பிடித்துவிடும். எனவே, ‘தி இந்து’வை பள்ளிகள், கல்லூரிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும். அங்கு பயிலும் மாணவர்கள் நாள்தோறும் இதை வாசிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்துவரும் சமூகம் நன்றாக இருக்கும். மக்களும், ஊடகமும் இணைந்தால் நிச்சயம் மாற்றத்தை உண்டாக்க முடியும் என்றார் திரைப்பட இயக்குநர் சேரன்.

இந்நிகழ்வை ஹார்லிக்ஸ் ஓட்ஸ், ராம் ப்ராபெர்டீஸ், லலிதா ஜூவல்லரி, சேவல் மார்க் பட்டாசுகள், வர்த்தமானன் பதிப்பகம், மதி இந்திராகாந்தி கல்லூரி, லியோ காஃபி, ஹோட்டல் பனானா லீஃப், சங்கம் ஹோட்டல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கின.

விழாவுக்கு வந்திருந்த வாசகர்கள் ‘தி இந்து’ குழும வெளியீடுகளை எளிதில் வாங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

‘தீர்வுகளை நோக்கிச் செல்ல உத்வேகம்’

வாசகர் திருவிழாவில் ‘தி இந்து’ ஆசிரியர் கே.அசோகன் பேசியதாவது:

குறைகளைத் தீர்க்க என்ன செய்யலாம், அதற்கான வழிமுறைகள் என்ன, நிரந்தரத் தீர்வு என்ன என்பதை நோக்கி நாங்கள் செல்வதற்கான உத்வேகத்தை அளித்தது வாசகர்களாகிய நீங்கள்தான்.

மழை, வெள்ளத்தால் அவதிப்படும் கடலூர் மக்களுக்காக களத்தில் இறங்கி உதவலாமே என்று வாசகர்கள் கூறியதையடுத்து, ஆசிரியர் குழு உடனடியாக ஆலோசனை நடத்தி, வாசகர்கள் மீது நம்பிக்கை வைத்து மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய பாயும், போர்வையும் தந்து உதவுமாறு சிறிய அறிவிப்பை வெளியிட்டோம். வாசகர்கள் அனுப்பும் பொருட்களை கட்டணமின்றி கடலூருக்கு அனுப்பி உதவுவதாக கே.பி.என். டிராவல்ஸ் உரிமையாளர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து வாசகர்கள் அனுப்பிய பொருட்கள் கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

8 days ago

மற்றவை

15 days ago

மற்றவை

21 days ago

மற்றவை

30 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்