சொன்னது சொன்னபடி: 37பி பஸ் மீண்டும் இயக்க வேண்டும்

By செய்திப்பிரிவு

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:

37பி பஸ் மீண்டும் இயக்க வேண்டும்

37பி என்ற எண் கொண்ட பஸ் முன்பு பெரம்பூர்-வடபழனி இடையே இயக்கப்பட்டது. பின்னர் ஒரு முனையில் பெரம்பூர் திரு.வி.க.நகர் வரையும் மறுமுனையில் ஐயப்பன் தாங்கல் வரையும் நீட்டிக்கப்பட்டது. இந்த பஸ் ஓட்டேரி வழியாக இயக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் வடபழனி முருகன் கோயிலுக்கு செல்ல வசதியாக இருந்தது. இந்த சேவை சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. அதனால் முருகன் கோயி லுக்கு செல்ல 2 பஸ்களில் ஏற வேண்டியுள்ளது. எனவே 37பி பஸ் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்.

கி.லியோன் ட்ராட்ஸ்கி, ஓட்டேரி.

நடைபாதைகள் ஆக்கிரமிப்பு

திருமங்கலம் காவல் நிலையம் அருகில் உள்ள பள்ளி சாலையில், மாநகராட்சி சார்பில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது சாலையோர கடை கள் ஆக்கிரமித்துள்ளன. இத னால் நடைபாதையை பொது மக்களால் பயன்படுத்த முடிய வில்லை. வாகனங்களுக்கு மத் தியில் மாணவர்கள் அச்சத் துடன் சாலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. அதனால் ஆக்கிரமித் துள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருமாள் சாமி, அண்ணாநகர் மேற்கு.

போக்குவரத்து விதிமீறலால் நெரிசல்

திருவான்மியூர் டைடல் பார்க் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து போலீஸ் கண்காணிப்பு இல்லாததால் ஒரு வழிப் பாதையில் விதிகளை மீறி வாகனங்கள் செல்கின்றன. இது போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் சர்வீஸ் சாலையில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அதனால் அப்பகுதியில் போதிய போக்கு வரத்து போலீஸாரை நியமித்து, போக்குவரத்து விதி மீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.கே.திருப்பதி ரங்கன், கொட்டிவாக்கம்.

குடிநீரில் கழிவுநீர் கலப்பு

அயனாவரம் மேட்டுத் தெருவில் குடிநீர் வாரியத்தால் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இது தொடர் பாக குடிநீர் வாரியத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை பணம் செலவழித்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே சுத்த மான குடிநீரை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாசகி, அயனாவரம்.

ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்கவில்லை

பம்மல் நகராட்சி, 5-வது வார்டு கிருஷ்ணராஜ் நகர் பகுதியில் நகராட்சி சார்பில் புதிய குடிநீர் குழாய்களை பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக பள்ளம் தோண்டும்போது, பழைய குழாய்களை உடைத்து விடு கின்றனர். அதனால் கடந்த ஒரு மாதமாக அப்பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட் டுள்ளது. சாலை பழுதாகியுள் ளதால், லாரியிலும் குடிநீர் விநியோகிக்க முடியவில்லை. அதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே புதிய குழாய் பதிக்கும் பணியை போர்க்கால அடிப்படையில் முடித்து, விரைவாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

ஆர்.வெங்கட்ராமன், பம்மல்.

குறைந்த அழுத்த மின்சாரத்தால் அவதி

மேற்கு மாம்பலம், மூர்த்தி தெரு பகுதியில் குறைந்த அழுத்தமுள்ள மின்சாரம்தான் வருகிறது. இதனால் அப்பகுதி யில் உள்ள குடியிருப்புகளில் மின் தூக்கிகள் இயங்குவதில்லை. அதனால் பல்வேறு குடியிருப்பு களில் வசிக்கும் நோய்வாய்ப் பட்ட முதியோர்கள் படிக்கட்டு களில் ஏற முடியாமல் அவதிப் பட்டு வருகின்றனர்.

எனவே அப்பகுதியில் கூடுதலாக மின் மாற்றி ஒன்றை அமைத்து, குறைந்த அழுத்த மின்சாரம் வருவதை தடுக்க வேண்டும்.

வாசகி, மேற்கு மாம்பலம்.

கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி

மடிப்பாக்கம் காஞ்சி காமாட்சி நகர் முதல் தெருவில் மேற் கொள்ளப்பட்ட மழைநீர் வாய்க் கால் பணி நிறைவுபெற்றுவிட்டது. மழைநீர் வாய்க்கால் உயரமாகவும், சாலை பள்ளமாகவும் உள்ளது. இதனால் வாகனங்களை வீடுகளுக்குள் ஏற்ற முடியவில்லை.

வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் ஆம்புலன்ஸ் கூட அச்சாலையில் வர முடியாதநிலை ஏற்படுகிறது. அதனால் 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

ஜி.பிரித்திவிராஜன், மடிப்பாக்கம்.

அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

044-42890002

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

1 day ago

மற்றவை

14 days ago

மற்றவை

22 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

6 months ago

மேலும்