கொளத்தூரில் பிஎஸ்என்எல் இணைப்புகள் செயல்படவில்லை

சென்னை கொளத்தூர் விநாயகபுரம் பகுதியில் கடந்த 3 மாதத்துக்கும் மேலாக பிஎஸ்என்எல் இணைப்புகள் செயல்படவில்லை என்று ‘தி இந்து’ உங்கள் குரலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சேகர் என்ப வர் ‘தி இந்து’உங்கள் குரல் சேவையில் கூறியதாவது:

சென்னை விநாயகபுரம் பகுதியில் நூற்றுக்கணக் கானவர்கள் பிஎஸ்என்எல் சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு விநாயக புரம் காஞ்சி நகர், காஞ்சி நகர் விரிவாக்கம் உட்பட பெரும்பாலான பகுதிகளில் பிஎஸ்என்எல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் பிஎஸ்என்எல் சேவை களை எங்களால் பெற முடியவில்லை. இதற்காக எங்கள் பகுதி பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் புகார் அளித்தோம்.

பிஎஸ்என்எல் கேபிள்களை யாரோ திருடிச் சென்ற தாகவும் விரைவில் அவற்றை சரி செய்வதாகவும் அவர்கள் உறுதி அளித்தனர். ஆனால், ஒரு மாதத்துக்கு மேலாகியும் நிலைமை அப்படியே உள்ளது. இந்த பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் சென்னை வட்ட பொது மேலாளர் எஸ்.எம்.கலாவதியிடம் கேட்ட போது, “இதுபற்றி எனது கவனத்துக்கு எதுவும் வரவில்லை. உடனடியாக விநாயகபுரம் பகுதிக்கு அதிகாரிகளை அனுப்பி விவரம் கேட்குமாறு உத்தரவிடுகிறேன். பிஎஸ்என்எல் வேண்டாம் என்று சென்றவர்களையே நாங்கள் திரும்பவும் தொடர்பு கொண்டு இணைப்பினை மீண்டும் பெற வலியுறுத்தி வருகிறோம். எனவே, இருக்கிற இணைப்புகளை கைவிட மாட்டோம். புதிய கேபிள்களை பதித்து விநாயகபுரம் பகுதியிலுள்ள பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படும்” என்றார்.



விண்ணப்பித்து 5 ஆண்டுகளாகியும் ரேஷன் கார்டு பெறுவதில் சிக்கல்

கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனி யாக ரேஷன் கார்டு வழங்க விண்ணப் பித்து 5 ஆண்டுகளாகி யும் கிடைக்கவில்லை என வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘தி இந்து’ உங்கள் குரலில் தாம்பரத்தைச் சேர்ந்த வாசகர் ஒருவர் கூறியதாவது:

நான் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கூட்டுக் குடும்பமாக வசித்தேன். இப்போது பிரிந்து அதே பகுதியில் 2 தெருக்கள் தள்ளி வேறு வீட்டில் வசித்து வருகிறேன். நான் தற்போது வசிக்கும் வீட்டின் முகவரியில் ஆதார் அட்டை, சமையல் எரிவாயு இணைப்பு வாங்கி உள்ளேன். ஆனால், இன்னும் ரேஷன் கார்டை பிரித்து தனி கார்டாக வாங்க முடியவில்லை.

நீக்கல் சான்றுக்கு விண்ணப்பித்தால் வழங்கல் பிரிவு அலுவலர்கள் ஒரே மண்டலத்துக்குள் பிரித்து தர முடியாது என்று கூறுகின்றனர். இதனால் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நான் ரேஷன் கார்டு வாங்க முடியாமல் தவித்து வருகிறேன் என்றார்.

இதுகுறித்து, குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ஒரே மண்டலத்துக்குள் ஒரே வீட்டில் இருந்தால் தனித்தனி கார்டு தர முடியாது. அவர் வேறு வீட்டில் தனியாக சமையல் செய்து வசிப்பாராயின் உரிய ஆவணங்களைப் பெற்று, ஆய்வு செய்து தனி ரேஷன் கார்டு வழங்கி வருகிறோம். அதிகாரிகள் ஆய்வின்போது விண்ணப்பதாரர்கள் தாங்கள் அளித்த முகவரியில் இருந்தால் ரேஷன் கார்டு வழங்குவதில் பிரச்சினை இல்லை” என்றார்.



உயர் நீதிமன்ற வளாகத்தில் மிகவும் பழுதடைந்த சாலைகள்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்திருப்பதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரலில் வாசகர் ஒருவர் தெரிவித்ததாவது: உயர் நீதிமன்றத்தில் தார் சாலை போட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அதனால், பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக இருக்கிறது. இதனால் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பல வழக்கறிஞர் சங்கங்கள் உயர் நீதிமன்றப் பதிவாளரை (நிர்வாகம்) சந்தித்து, விரைவில் சாலை போடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி நேரில் வலியுறுத்தியதுடன் கோரிக்கை மனுக்களையும் கொடுத்துள்ளனர். அதன் பிறகும் உயர் நீதிமன்ற வளாகத்தில் சாலை அமைப் பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை என்றார்.

இதுகுறித்து உயர் நீதிமன்ற நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை உயர் நீதிமன்றம் முழுவதும் பராமரிப்புப் பணிகளை தமிழக பொதுப்பணித் துறைதான் மேற்கொள் கிறது. பராமரிப்புப் பணி தொடர்பாக நடைபெற்ற கூட்டத் தில், உயர் நீதிமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் கலந்த கான்கிரீட் சாலை அமைத்துத் தருவதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பிளாஸ்டிக் சாலை அமைக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீண்டகாலம் ஆகியும் அதற்கான பணிகள் தொடங்கப்படாததால், உயர் நீதிமன்ற வளாகத்தில் தார் சாலை அமைப்பதற்கான கருத்துருவை பொதுப்பணித் துறைக்கு அனுப்பியுள்ளோம். நிதிப் பற்றாக்குறை காரண மாக இப்பணி தொடங்க தாமதம் ஏற்படுகிறது. எனவே, அரசிடம் கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளது. அந்த நிதி வந்த தும், சாலை அமைக்கும் பணி தொடங்கும் என்றார்.



அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002

என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE