தாய் மொழிப்பாடத்தை கட்டாயமாக்க முடியாது: கர்நாடக அரசு உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் தொடக்கப் பள்ளிக்கல்வித் திட்டதில் தாய் மொழிப்பாடத்தை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில், அனைத்து சிறுபான்மை கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழி பாடம் கட்டாயமாக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது.

மாநில அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, ஆரம்ப பள்ளிகளில் தாய்மொழி பாடத்தை திணிப்பது என்பது குடிமக்களின் உரிமையை மீறுவதாகும் என்று கூறி கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

11 days ago

மற்றவை

19 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

6 months ago

மேலும்