'இந்து தமிழ்’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ இணைந்து நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சி : அதிக நூல்கள் வாசிப்பு ஐஏஎஸ் தேர்வை எளிமையாக்கும். : ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

By செய்திப்பிரிவு

சேலம்

அதிகமான நூல்களை வாசிக் கும் பழக்கம் ஐஏஎஸ்தேர்வை எளிமையாக்கும் என ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

‘இந்து தமிழ்’ நாளிதழ் ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ ஆகியன சார்பில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற தலைப்பில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி சேலம் மூவேந்தர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரயில்வே காவல் துறை டிஜிபி டாக்டர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

ஐஏஎஸ் தேர்வுக்கு என்று தனி சிறப்பு உள்ளது. இத் தேர்வை பட்டப் படிப்பு படித்த அனை வரும் எழுதலாம் என்பதே. பொருளாதாரத்தில் பின்தங்கியவர் களும், ஆங்கிலம் தெரியாத வர்களும் கூட ஐஏஎஸ் தேர்வை எழுதலாம். நேற்று வரை நீங்கள் யாராக இருந்திருந்தாலும், இக் கணத்தில் இருந்து நீங்கள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றிடு வோம் என ஆழ்மனதில் அதற்கான எண்ணத்தை உருவாக்கி, உழைக்கும் முயற்சிக்கு வித் திட்டால் கண்டிப்பாக உங்களின் ஐஏஎஸ் கனவு நிஜமாகும்.மிகவும் வறுமையில் இருந்த பலரும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கெல்லாம் நான் பயிற்சி அளித்துள்ளேன்.

பதவி, புகழ், பொருளுக்கு ஆசைப்படக்கூடிய விஞ்ஞானிகள், அறிஞர்கள், பெரும் தொழில்நுட்ப வல்லுநர்களால் விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், சைக்கிள் கடை வைத்திருந்த ‘ரைட் சகோதரர்கள்’ தான் விமானத்தை கண்டு பிடித்தனர். அனைத்து மக்களும் விமானத்தில் பயணப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணம் அவர்களிடம் மேலோங்கி இருந்ததாலே, விமானத்தை அவர்களால் கண்டு பிடிக்க முடிந்தது.

அதேபோல, நாட்டுக்கு என்னால் நல்லது செய்ய முடியும், மக்களுக்கான சேவை யை திறம்பட ஆற்றிட வேண்டும் என்ற பொதுநோக்கு சிந்தனை யாளர்களால் மட்டுமே ஐஏஎஸ் தேர்வில் எளிதில் வெற்றியடைய முடியும்.தினமும் ஒரு மணி நேரம் ஆங்கிலம், தமிழ் தினசரி செய்தித்தாளை படிக்க வேண்டும். அப்போதுதான் பொது அறிவையும், நாட்டு நடப்புகளையும் அறிந்து கொண்டு, போட்டித் தேர்வுக்கு தயாராக முடியும்.

அதிகப்படியான நூல்களை வாசிப்பதன் மூலம் ஐஏஎஸ் போட்டித் தேர்வு எளிமையாகும். எளிது என எண்ணிவிட்டால் எல்லாமே எளிதாகிவிடும். உங்களது எண்ணங்கள் தான் நீங்கள் யார் என்பதை தீர்மானிக்கிறது. எனவே, ஐஏஎஸ் எண்ணத்துடன் நீங்கள் தயாராகிவிட்டால், உங்களை யாராலும் மாற்றிட முடியாது. வெற்றி நிச்சயம். வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் பேசும் போது, பல லட்சம் பேர் பங்கேற்கும் போட்டித் தேர் வில் நீங்கள் போட்டி போட்டு போரா டினால் தான் வெற்றி நிச்சயம். ஒவ்வொரு தோல்வியும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக் கிறது. படித்து பட்டம் பெறுவது எளிமை; போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது சாதனை, என்றார்.

நிகழ்ச்சியில் ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யின் மேலாண்மை இயக்குநர் தீனதயாளன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண் டார். ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யின் பயிற்சியாளர் சந்துரு, மாணவ, மாணவியர்களின் சந்தேகங் களுக்கு விளக்க மளித்தார்.

நிகழ்ச்சியை எஸ்.நெளஷாத் தொகுத்து வழங்கினார். சேலம் சிடிஎன் தொலைகாட்சி நிகழ்ச்சியை இணைந்து வழங்கியது.

மாணவ, மாணவிகள் ஆர்வம்:மோகன்குமார்: இந்நிகழ்ச்சியின் மூலம் ஐஏஎஸ் தேர்வுக்கான அதிகப்படியான தகவல் கிடைக்கப்பெற்றேன். போட்டித் தேர்வில் பங்கேற்க தன்னம்பிக்கையை இந்த நிகழ்ச்சி மூலம் பெற்றுள்ளேன்.

அருண்குமார்: டிஜிபி உரையால் உள்ளம் பூரிப்படைந்து, அவரையே ஒரு ‘ரோல் மாடலாக’ கொண்டு, அவரை போன்ற சாதனை மனிதராகும் எண்ணம் இந்த நிகழ்ச்சி மூலம் எனக்குள் ஏற்பட்டுள்ளது.

பூஜா: ஐஏஎஸ் கனவில் வரும் என்னைப்போன்ற தேர்வாளர்களுக்கான மிகவும் பயனுள்ள நல்ல பல உபயோகமான கருத்துகள் கிடைக்கப்பெற்றோம். ‘இந்து தமிழ்’ நாளிதழ் மாதம் ஒரு முறை வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

கீர்த்தனா: போட்டித் தேர்வில் எவ்வாறு எளிதில் வெற்றி பெற வேண்டும். அதற்கான வழி முறைகள், ஆலோசனைகள், தகவல்கள் அனைத்தும் இந்த நிகழ்ச்சியால் புது தெம்பை அளித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

7 days ago

மற்றவை

15 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்