# ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டுகிறது. உலகின் மரணங்களில் தற்கொலைகளின் சதவீதம் 1.8%.
# நம் நாட்டில் 2013-ல் மட்டும் 1.3 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டனர். 2013-ம் ஆண்டின் புள்ளிவிவரத்தின்படி, தற்கொலை செய்துகொள்பவர்களின் மொத்த எண்ணிக்கையில் 76% பேர் திருமணமானவர்கள்.
# இந்தியாவில், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 பெண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்கிறது, சமீபத்தில் வெளியான தேசியக் குற்ற ஆவணக் காப்பகப் புள்ளிவிவரம். இவர்களில் 17% இல்லத்தரசிகள்.
# தற்கொலை செய்துகொள்ளும் பெண்களின் சதவீதம் கடந்த 10 ஆண்டுகளில் 21-லிருந்து 17-ஆகக் குறைந்திருந்தாலும், இல்லத்தரசிகள் தற்கொலை செய்துகொள்ளும் விஷயத்தில் இன்றும் மோசமான நிலை உள்ளது.
# வீட்டிலிருக்கும் பெண்களிடம் மட்டும் அல்ல; மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட துணை ராணுவப் படைகளில் பணிபுரியும் பெண்களிலும் தற்கொலை வீதம் அதிகம்தான். இந்தப் படைகளில் பணியாற்றுவோர் மொத்த எண்ணிக்கையில் பெண்களின் பங்கு வெறும் 2%. ஆனால், அங்கு நடக்கும் தற்கொலைகளில் பெண்களின் வீதம் 40%. இந்தியா தன் மகளைக் காக்க இன்னும் நிறைய அக்கறை காட்ட வேண்டியிருக்கிறது!
முக்கிய செய்திகள்
மற்றவை
1 day ago
மற்றவை
14 days ago
மற்றவை
22 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
6 months ago