திரைத் தணிக்கையின் தலைமையிடம் மாறட்டும்: விஜயகுமார்

By செய்திப்பிரிவு

செய்தி:>ஆர்டிஐ அம்பலம்: சிஏஜி தகவல் கிளப்பும் சென்சார் வாரிய முறைகேடு சர்ச்சை

'தி இந்து' ஆன்லைன் வாசகர் விஜயகுமார் கருத்து:

திரைப்படத்துறை பல்லாயிரம் கோடிக்கணக்கான ருபாய்கள் புழங்கும் இடம், இதில் ஒரு வேடிக்கை என்னவெனில். இந்தியாவில் சுமார் 1000 படங்கள் உருவாகின்றன.

இதில் தமிழ். தெலுங்கு. கன்னடம். மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் மட்டும் 600 படங்கள் என்ற அளவை எட்டுகின்றன, கடந்த 50 ஆண்டுகளாக இதே நிலைதான், இந்திய அரசு திரைப்படத் தணிக்கைத் துறையின் தலைமை அலுவலகம் உண்மையில் தென் மாநிலங்களில் சென்னை அல்லது பெங்களூரில் இருப்பதே சரியானது, இன்று வரை அதைச் செய்யவில்லை.

மாட்டுத் தீவன ஊழலுக்கு இணையானது திரைப்படத் தணிக்கைத் துறையில் நடக்கும் ஊழல், அதில் பதவி வகிக்கும் உயர் அதிகாரிகளும். அவ்வப்போது நடுவண் அரசினால் நியமிக்கப்படும் அவர்களுக்கு வேண்டிய நபர்களும் பணம் பெற்று வருகின்றனர்.

ஆனால் இந்தக் கூட்டுக் கொள்ளை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது, எந்தப் பட அதிபரும். இயக்குநரும் இதை வெளிப்படுத்தினால் தங்களது அடுத்த படம் வெளிவரும்போது சிக்கல் ஏற்படும் என்பதால் மௌனம் சாதிக்கின்றனர், குறிப்பாகத் தமிழகத்தில் திரையுலகம் சார்ந்த ஒருவர் உறுதியான நிலை கொண்டவர் வாய் திறந்தால் பல முடிச்சுகள் அவிழும், இதே நிலைதான் இந்திய அளவில்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

1 day ago

மற்றவை

14 days ago

மற்றவை

22 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

6 months ago

மேலும்