நாடாளுமன்றத்தில் பதிலளிப்பாரா? - பாலகிருஷ்ணன்

செய்தி:>நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: கூட்டணி தலைவர்களுடன் மோடி இன்று முக்கிய ஆலோசனை- வியாபம், லலித் மோடி விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்.

'தி இந்து' ஆன்லைன் வாசகர் எஸ்.பாலகிருஷ்ணன் கருத்து:

நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. மோடி பிரதமராக பதவியேற்று ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. தேர்தலின்போது மக்களுக்கு அளித்த எந்த. வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணத்தை ஆட்சிக்கு வந்த நூறுநாட்களில் மீட்டெடுத்து மக்களின் வங்கிக்கணக்கில் சேர்ப்போம் என்றார்.

மக்கள் வங்கிக்கணக்கை தொடங்க ஒரு திட்டமும் கொண்டு வந்தார். மக்கள் வங்கிக்கணக்கை தொடங்கி வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். பணம்தான் வந்து சேரவில்லை. விவசாயிகளிடபிருந்து நிலங்களை பிடுங்கி

பெருமுதலாளிகளுக்கு கொடுப்பதில் மும்மரமாக இறங்கினார் விவசாயிகள், எதிர்கட்சியினர், ஏன் கூட்டணி கட்சியினரே எதிர்ப்பதால் அதையும் நிறைவேற்றக்கூட முடியவில்லை தேர்தலின்போது முதலாளிகளுக்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை.

எங்கள் ஆட்சியின் ஓராண்டு சாதனை ஊழலை ஒழித்ததுதான் என்றார். லலித்மோடி விவகாரம், வியாபம் ஊழல், மஹாராஷ்டிராவில் கல்வித்துறையில் ஊழல், என்று மேலும் பல ஊழல்கள் பல்லை இளிக்கின்றன.

இவற்றுக்கெல்லாம் பிரதமர் நாடாளுமன்றத்தில் பதில் சொல்லுவாரா? அல்லது ஏதாவது வெளிநாட்டுக்கு பயணம் சென்று விடுவாரா? அவருக்கே வெளிச்சம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

7 days ago

மற்றவை

14 days ago

மற்றவை

20 days ago

மற்றவை

29 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்