செய்தி:>தோமர் போல் 6 எம்.எல்.ஏக்களிடம் போலிச் சான்றிதழா?- விசாரணைக் குழு அமைத்தது டெல்லி போலீஸ்
'தி இந்து' ஆன்லைன் வாசகர் மு.தணிகாசலம் கருத்து:
உண்மையான கல்வி சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுவதில் என்ன சிக்கல் இருக்கமுடியும்? உண்மையான கல்வி சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் இன்று மறுதேர்வு நடத்தினால், அதில் பெரும்பாலானவர்கள் அந்த சான்றிதழை வைத்திருக்க தகுதி அற்றவர்களாகத்தான் இருப்பார்கள்.
அதேநேரத்தில், ஒரு சிலர் தாங்கள் வைத்திருக்கும் கல்வித் தகுதி சான்றுகளை விடவும் அதிகமான கல்வித் தகுதியை பெற்றிருப்பார்கள். கல்வி தகுதிச் சான்றிதழ் என்பதெல்லாம், ஒருவர் பெற்றுள்ள கல்வி அறிவுக்கு வழங்கப்படும் தோராய அளவுகோல் மட்டுமே.
ஆகவே போலியான, தவறான அல்லது உரிய அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களின் கல்வித்தகுதி சான்றுகளை அளித்து தேர்தல்களில் வெற்றிபெற்றவர்களை குற்றவாளிகளாக கருதாமல் இந்த பிரச்சனைக்கு தீர்வுகான புதிய நெறிகளை உருவாக்க வேண்டும்.
உருவாக்கப்படும் புதிய நெறிகளை நடைமுறைப் படுத்திவிட்டு எதிர் வரும் காலங்களில் வேண்டுமானால் கல்வித்தகுதி சம்பந்தமாக தவறான தகவல் அளித்து தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு தண்டணை மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு தண்டணை தகுதி நீக்கம் ஆகியவவைகளை கட்டாயப்படுத்தலாம். அகத்தியரும் தொல்காப்பியரும் எந்த கல்வி நிறுவனத்தில் சான்று பெற்றார்கள்?
முக்கிய செய்திகள்
மற்றவை
1 day ago
மற்றவை
13 days ago
மற்றவை
21 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago