மனிதன் முதலில் தனக்குள் ளும், பிறருடனும் இணக்க மாக இருத்தல் அவசியம். இதற்கடுத்தாற்போல மிக முக்கிய மாக, அவன் இறை வனோடு அதாவது இறைத் தன்மைகளுடன் இணக்கமாக இருக்கவேண்டியது அவசியம் என்பதை உணர்கிறான்.
அப்போதுதான், நாம் எங்கி ருந்து வந்தோமோ, யாரிடமிருந்து வந்தோமோ அவருக்கு உகந்தவ ராக இருக்க வேண்டியதுதான் தன் முழு வாழ்க்கையின் லட்சியம் என்பதை உணர ஆரம்பிக்கிறான். அப்போது அவனுக்கு 100 சதவீத ஆன்மிக வாழ்க்கை ஆரம்பமாகி றது.
சகுணக் கடவுளை (குணங்கள் கொண்ட கடவுள்கள்) ஏற்றுக் கொள்பவர்கள் தாங்கள் பகவானிடம் இருந்து பிரிந்திருப்பதை உணர்வார்கள். பக்தன், பக்தி யோகத் தின் மூலமாகவோ, கர்ம யோகத்தின் மூலமாகவோ பகவா னிடம் மீண்டும் சேரு வதையே தனது ஆன் மிகச் சாதனையாகச் செய்கிறான்.
பொதுநலம் கொண்ட செயல்கள், கடமைகள் இவற்றின் மூலம் ஒருவன் தனது தெய்வ நிலையைத் திரும்ப அடையும் மார்க்கம்தான் கர்ம யோகம்.
தனது இஷ்ட தெய்வத்திடம் தனது பக்தியையும் அன்பையும் நிஷ்டையையும் செலுத்தி, ஒருவன் தனது தெய்வ நிலையைத் திரும்பப் பெறுவது பக்தி யோகம்.
குணங்களைக் கடந்த நிர்க் குண பிரம்மனையோ, இயற் கையையோ பரம்பொருளாக ஏற்றுக்கொண்டவர்களும் மீண்டும் தங்களது மூலத்தை அடையத் துடிப்பார்கள். அவர்களுக்கான யோகங்களாக ஞான யோகமும், ராஜயோகமும் விளங்குகின்றன.
மனதை அடக்கி அதன்மூலம் ஒருவன் தனது உண்மையான நிலையை உணர்வது ராஜயோகம்.
ஞான யோகத்தின் மூலம் எது நிரந்தர உண்மை, எது தோன்றி உண்மைபோல் காட்டுவது என் பதைத் தனது விவேகத்தால் கண்டு ஆராய்ந்து நித்தியமான பரம் பொருளை அறிவாராய்ச்சியால் உணர்ந்து தெளிவு பெற முடியும்.
மேலே கூறியவை மனிதனின் மூலமான பிரபஞ்சத்தின் ஒரே மையமான இறை வனை அல்லது பரம் பொருளை நோக்கிச் செல்லும் வெவ்வேறு பாதைகள்.
இவற்றில் பக்தன் அல்லது ஆன்மிகச் சாதகன் தனக்கேற்ற மார்க்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது தகுதியான குருவருளால், தான் எந்த யோகத் துக்கு ஏற்றவன் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
யோகத்தின் பல நிலைகள்
ராஜயோகத்தில், பதஞ்சலி முனி வர் ‘அஷ்டாங்க யோகம்’ என்பதை விவரிக்கிறார். அந்த 8 யோகங்கள்:
1. யமம்:
அஹிம்சை, சத்தியம், திருடாமை, தானம் ஏற்காமை, பிரம்மச்சரியம் ஆகியவை யமத்தின் அங்கங்கள். இவை மனதை அதாவது சித்தத்தை தூய்மையாக்கும்.
2. நியமம்:
தவம், கல்வி, சந்தோ ஷம், திருப்தி, தூய்மை, பூஜை ஆகியவை நியமத்தின் அங்கங்கள்.
3. ஆசனம்:
உடலைத் தகுதியுடன் வைத்திருப்பது.
4. பிராணாயாமம்:
உடம்பில் உள்ள உயிர் சக்திகளை அடக்கி நெறிப்படுத்துவது. மூச்சுப் பயிற்சி என்பது இதன் ஓர் அங்கம். பிராணாயாமத்தில் மூச்சுப் பயிற்சி, அநேக ஆசனங்கள் செய்து உடலை அதிக காலம் நேர்த்தியாக, ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு ‘ஹட யோகம்’ என்று பெயர்.
5. பிரத்யாஹாரம்:
இந்திரியங்கள் புறப்பொருட்களுடன் தொடர்பு கொண்டு புறநாட்டம் கொள்வதை மனதின் சங்கல்பத்தால் கட்டுப்படுத்துவது.
6. தாரணை:
மனதை இதயக் கமலத்தில் அல்லது சஹஸ்ராரத் தில் நிறுத்துவது.
7. தியானம்:
மனதை ஓரிடத்தில் நிலைப்படுத்தி, மனதில் மற்ற எல்லா அலைகளையும் அடக்கி, ஓர் அலை மட்டும் தீச்சுடர்போல அசையாமல் இருக்கும் நிலை.
8. சமாதி:
மனம் முழுவதும் ஒரே அலையாக, ஒரே வடிவமாக ஆவதுதான் சமாதி நிலை.
யோகம் என்பது இவ்வளவு உயர்ந்த, ஆழமான விஷயம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
மூன்று முக்கிய நிலைகள்
யோகத்தில் 3 முக்கிய நிலைக ளும் பலன்களும் உள்ளன. அவை :
1. எனக்குள் நான் இணக்கத்துடன் இருப்பது ஆனந்தமான நிலை.
2. நான் பிறருடனும் இயற்கையு டனும் இணக்கத்துடன் விளங்கு வது நாம் ஆனந்தத்தைப் பெருக் கிக்கொள்ளும் நிலை.
3. தெய்வத்துடனும், தெய்வீகக் குணங்களுடனும் இணங்கி இருப் பதே நம் உண்மையான நிலை.
இவற்றை மனதில் கொண்டு, உலக யோகா தினத்தைக் கொண்டாட ஆசனங்கள், சூரிய நமஸ்காரம், மூச்சுப் பயிற்சிகளை ஒவ்வொன்றாக ஆரம்பிப்போம்.
(சுவாமி விமூர்த்தானந்தர் - சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர்)
- நாளையும் யோகம் வரும்..
முக்கிய செய்திகள்
மற்றவை
9 days ago
மற்றவை
17 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
5 months ago