செய்தி:>ஜூலை 1 முதல் வாகன ஓட்டியும் உடன் பயணிப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்: தமிழக அரசு
'தி இந்து' ஆன்லைன் வாசகர் துரைராஜ் கருத்து:
ஹெல்மெட் அணிவது அவசியம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அதே நேரத்தில் இதில் மற்ற பிரச்சனைகளை ஆராயாமல் ஒரு சட்டத்தின் மூலம் மக்களை மாற்றி விட நினைப்பதும், பொது அறிவோடு வண்டி ஓட்ட முடியாதவர்கள் கூட ஆமா ஆமா இந்த சட்டம் அவசியம் என்று பெருந்தன்மையாக பேட்டி கொடுப்பதும் முரண்பாடு?
இது மாதிரியான சட்டங்களை ஓட்டுனர் உரிமம் கொடுப்பதற்கும், சாலைகள் விஷயத்திலும், இந்த சட்டங்களை செயற்படுத்தக் கூடிய காவல் துறையினருக்கும் கொண்டு வந்தாலே பாதி குற்றம் குறையும். யார் வேண்டுமானாலும் வண்டி வாங்கலாம் எப்படி வேண்டுமானாலும் ஓட்டலாம்.
இதுதான் நம் நாட்டின் நிலை. இது மாதிரியான சட்டங்கள் சந்து, பொந்துகளில் நின்றுகொண்டு காவல்துறையினர் தங்களது "கடமையை" செய்வதற்குத்தான் பயன்படுகிறது. முக்கியமான சாலைகளில் நின்றுகொண்டு வாகன சோதனை செய்தால் போதாதா அதையும் மீறி குறுக்கு வழியில் செல்கிறவர்கள் செல்லட்டும்.
அவர்களை திருத்தவும் முடியாது பக்கத்தில் போவதற்கு கூட ஹெல்மெட் போடுவது சாத்தியமும் இல்லாதது? காவல்துறையின் நடவடிக்கைகள் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமே தவிர பயத்தை அல்ல.
முக்கிய செய்திகள்
மற்றவை
1 day ago
மற்றவை
13 days ago
மற்றவை
21 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago