எச்சரிக்கைகளில் அலட்சியம் வேண்டாம்: பாலன்

செய்தி:>மெட்ரோ ரயில் பாலம் கட்டுமான பணியின்போது இரும்பு கம்பி கழன்று விழுந்து பைக்கில் சென்றவர் பலி: பொறியாளர் உட்பட 3 பேர் கைது

'தி இந்து' ஆன்லைன் வாசகர் பாலன் கருத்து:

நிதர்சனம். தடுக்க முடியவில்லை என்பது வேதனைக்கு உரிய விஷயம். நான் இரு சக்கரவாகனத்தில் செல்லும்போது, என்னைக் கடந்து செல்லும் பல, நான்கு சக்கர வாகனங்களின், குறிப்பாக கார்களின் கதவுகள் ஒழுங்காக மூடப்படாதது குறித்து, பலமுறை எச்சரித்தது உண்டு.

இது போல நம் அன்றாட தினசரி வாழ்க்கையில், நமக்கு எந்தவகையிலும் சம்மந்தம் இல்லாத நபர்கள், நம்மை மறைமுகமாக எச்சரிக்கின்றனர் பல வழிகளில். சமுதாய அக்கறை, சக மனிதர்கள் மீது அக்கறை, ஏராளமானவர்களிடம் உண்டு. அவர்களுக்கு இருக்கும் அவசரத்தில் கூட, கூறி எச்சரிப்பார்கள்.

நமக்குள் இந்த சகமனித பாதுகாப்பு உணர்வு மேம்பட்டால், இதுபோன்ற அலட்சியம் தடுக்கப்படலாம். காரணம், அலட்சியம் செய்வது ஒரு நபர். சுட்டிக்காட்ட பல நபர்கள் இந்த சமுதாயத்தில் உண்டு, எத்தனையோ சிறுவர்கள் என்னை எச்சரித்ததும் உண்டு. அது எனக்கு பயன்பட்டதும் உண்டு.

ஒரு தனிப்பட நபரின் அலட்சியத்தை தடுக்க, தற்போதைய எந்திர வாழ்க்கையில், பலருடைய, இயற்கையாகவே உள்ள எச்சரிப்பு குணம் சமுதாயத்தில் மேம்படவேண்டும். இப்படி இயற்கையாகவே, மற்றவர்கள் என்ன சொல்லுவாங்களோ என கவலைப்படாமல், எச்சரிக்கும் நபர்களை மதித்து இந்த விமர்சனம் எழுதி உள்ளேன். வாழ்க அவர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

7 days ago

மற்றவை

14 days ago

மற்றவை

20 days ago

மற்றவை

29 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்