குற்றம்சாட்டப்பட்டவர் பதவியில் நீடிக்கலாமா: எழில்

By செய்திப்பிரிவு

கருத்துக்கணிப்பு:>பாஜக மீதான ஆஆக சாடல் எத்தகையது?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் எழில் கருத்து:

ஒரு குற்ற செயலில் நடவடிக்கை எடுப்பதை எப்படி ஆம் ஆத்மி கட்சி அரசு குறை கூறுகிறது. இவர்கள் மற்ற அரசியல் கட்சிகளைக் காட்டிலும் உத்தமர்கள் என்றுதான் ஓட்டு வாங்கி ஜெயித்தார்கள். ஆனால் குற்ற செயலில் ஈடுபட்ட ஒருவரே சட்ட அமைச்சர் என்றால்?

நடவடிக்கை எடுத்தால் அது தவறு. இது ஒன்றும் புகார் சொன்னதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. போலி சான்றிதழ் என்று உறுதி செய்யப்பட்டு டெல்லி பார் கவுன்சில் இவருக்கு தடை விதித்து கவுன்சிலில் இருந்து நீக்கியது, இவர் காட்டிய சான்றிதழ் எண் வேறு ஒருவருடையது என்று பல்கலைக் கழகமே சொன்ன பிறகும் இவரை சட்ட அமைச்சராக நீட்டிப்பதுதான் ஆம்ஆத்மி அரசின் நேர்மையா?

இத்தனை நடந்த பிறகு கைது செய்வதில் என்ன தவறு உள்ளது? ஆம் ஆத்மி அரசு கொள்கையில் உறுதியாக உள்ளது உண்மை என்றால், இவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி நேர்மையாக வழக்கை சந்திக்க சொல்ல வேண்டும். மாறாக அவர்கள் மோடியின் மீதுதான் பழி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

17 hours ago

மற்றவை

13 days ago

மற்றவை

21 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மேலும்