பாடதிட்டக் கருத்துக்களை தமிழ்ப்படுத்துங்கள்: ரஞ்சித்

By செய்திப்பிரிவு

கட்டுரை:>தமிழ், தானாக வளர்ந்துவிடாது

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ரஞ்சித் கருத்து:

தேவை அறிவுத் தமிழ்! அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழி ஆக்கப்பட்டுவிட்டது. இந்நிலை நீடித்தால் இன்னும் ஐந்தே ஆண்டுகளில் பள்ளிக்கல்வித் தமிழும் பாடையில் சென்றுவிடும். பெற்றோர் தன் பிள்ளைகள் ஆங்கிலவழியில் கல்வி பெறுவதையே விரும்புகிறார்கள் என்கின்றனர்.

பெற்றோர் இப்படி விரும்புவதற்குப் பெருமை, மோகம் போன்றவை தான் காரணமென மேம்போக்காகச் சொல்லப்பட்டாலும், அதற்கான மெய்ப்பொருளை அறிவுப்பூர்வமாக உணராத வரை, தமிழ் வழிக் கல்வி என்பது உருகும் மெழுகே! பள்ளிக் கல்வி வரை மட்டுமே ஓரளவு தமிழ் போதிக்கும் கல்விச் சூழலில் வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம், கலை, அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வியானது 99% தமிழ்ப்படுத்தப்படவேயில்லை.

பள்ளிக் கல்வி வரையிலான பாடங்களில் கூடுதல் கருத்துகளைத் தேட முயன்றாலும் அவையும் 99.9% ஆங்கிலத்திலேயே உள்ளன. தமிழ்ப்படுத்தப்பட்ட பட்டப்படிப்புத் துறைசார் மேற்கருத்துகளைத் தேட முயன்றாலும் அவையும் 100% ஆங்கிலத்திலேயே உள்ளன என்பதே உண்மை. உடனடியாக இந்நிலை தீர்க்கப்பட வேண்டும். சூழல் இப்படி இருக்க, வயிற்றுப் பிழைப்பிற்கு வழிவகை செய்யாதத் தமிழ் வழிக் கல்வியை யார் தான் முன் மொழிவர்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

16 hours ago

மற்றவை

13 days ago

மற்றவை

21 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மேலும்