செய்தி:>அதானி கையில் மாயக்கயிறு விழிஞ்சமா, குளச்சலா?
'தி இந்து' ஆன்லைன் வாசகர் சுவாமிதாசன் பிரான்சிஸ் கருத்து:
வாஜ்பாய் பிரதமராகவும், பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் எம்.பி யாகவும் இருந்தபோது 20,000/- கோடியில் குளச்சல் துறைமுகத் திட்டம் வரையறுக்கப் பட்டது. ஆனால், தமிழக அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து இத்திட்டத்துக்காக முயற்சிகள் மேற்கொள்ளாததால், அதன் பிறகு வந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கேரள அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து முயன்று விழிஞ்சத்துக்கு இத்திட்டத்தை மாற்றி விட்டார்கள்.
மாநில நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயல்படும் கேரள அரசியல் கட்சிகளிடம், தமிழக அரசியல் தலைவர்கள் பாடம் கற்க வேண்டும். தமிழக கேரள எல்லையில், குமரி மாவட்ட விழிம்பில் அமைந்துள்ளது விழிஞ்சம். ஆனால், திருவிதாங்கூர்
மன்னராட்சியில் 17ஆம் நூற்றாண்டிலேயே புகழ் வாய்ந்தது குளச்சல் துறைமுகம். போர்ச்சுக்கல் நாட்டு டிலனாய் படையை, திருவிதாங்கூர் படை வென்ற குளச்சல் போர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று வாதாட வலிமையிழந்து, ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்பையும், கோடி கோடி வணிகத்தையும் தமிழகம் குளச்சல் துறைமுகத்தை இழப்பதன் மூலம் இழப்பதற்கு, இங்குள்ள தலைவர்களே காரணம். இனியாவது விழிப்பார்களா?
முக்கிய செய்திகள்
மற்றவை
17 hours ago
மற்றவை
13 days ago
மற்றவை
21 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago