விவசாய சங்கங்கள் ஒன்றிணையட்டும்: சச்சிதானந்தம்

செய்தி:> 'தி இந்து' செய்தி எதிரொலி: தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சச்சிதானந்தம் கருத்து:

விவசாயிகள் தங்கள் விளைபொருளுக்கு கட்டுபடியாக கூடிய விலை, அநியாய இடுபொருள் விலை, காவிரியின் மீது உரிமை, நீர்நிலைகள் பராமரிப்பு, மராமத்து போன்ற கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமானால் அவர்களின் குரல் சட்ட மன்றங்களிலும் பாரளுமன்றத்திலும் ஒலிக்கவேண்டும்.

எந்த அரசியல் கட்சிகளையும் நம்பி இருக்கக் கூடாது. அவைகள் தங்கள் சுயலாபத்துக்காக கட்சியில் விவசாய அரசியல் பிரிவுகளை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. எனவே விவசாயிகள் தங்கள் வேற்றுமைகளை மறந்து சங்கம் அமைத்து தேர்தலில் போட்டி இட வேண்டும்.

இது ஒன்றுதான் தீர்வு. சுமார் 60 வருடங்களாக அரசியல்வாதிகளை நம்பி ஏமாந்தது போதும். இதுபோன்ற ஒரு முயற்சி திமுக ஆட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் தோற்கடிக்கப்பட்டது.

இதை நினைவில் கொண்டு விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து உறுதியுடனும் வலிமையுடனும் தேர்தலில் போட்டி இட வேண்டும். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற இது ஒன்றுதான் வழி. விவசாயிகள் அரசியல் கட்சிகளுடனான தங்கள் தொடர்பை துண்டித்து கொள்ள வேண்டும் வெற்றி நிச்சயம். துணிவே துணை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

7 days ago

மற்றவை

14 days ago

மற்றவை

20 days ago

மற்றவை

29 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்