கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும்: ஸ்ரீனிவாசன்

By செய்திப்பிரிவு

செய்தி:>காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஸ்ரீனிவாசன் கருத்து:

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று மனு தாக்கல் செய்தது. மேற்படியான செய்தியானது கர்நாடக அரசின் மனிதாபிமானற்ற செயலை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது.

இதுவே அன்றாடம் தனது கர்நாடக மக்கள் பயன்படுத்தும் மற்றும் குடிக்கும் நீராக இருப்பின் இந்த கர்நாடக அரசானது கையைக் கட்டிக் கொண்டு சும்மாவேனும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்குமா? உடனே இது மாதிரியான செயல்கள் தடுத்து நிறுத்திட வேண்டும் என வீறுக்கொண்டு இருக்காதா!

ஆயின் கர்நாடக அரசின் முதல்வரோ உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்திருக்கும் வழக்கினை தனது சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து சந்திக்கும் என கூறியிருப்பது ஒரு கண்டிக்கத்தக்க விஷயமாகும். மக்கள் நலனில் உண்மையாகவே இந்த முதல்வருக்கு சற்றேனும் அக்கறையிருப்பின் உடனடியாக தனது சம்பந்தபட்ட துறையின் அதிகாரிகளை அழைத்து தமிழகத்துக்கு செல்லும் புனித நதியான காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தும்படி உத்தரவு இட்டிருக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

17 hours ago

மற்றவை

13 days ago

மற்றவை

21 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மேலும்