செய்தி:>பிளஸ் 2 தேர்வில் 90.6% தேர்ச்சி: மாநில அளவில் திருப்பூர் பவித்ரா, கோவை நிவேதா முதலிடம்
'தி இந்து' ஆன்லைன் வாசகர் கே.பாலச்சந்திரன் நாயர் கருத்து:
கல்வி என்பது பலவிதமான தொழில்திறன்கள் தேடிக்கொள்வது மட்டுமல்லாமல், எவ்விதமான பிரச்சினைகளையும் எதிர்க்கொண்டு வெற்றி பெறுவதற்கான நேர்முக பயிற்சியும் கூட என்கிற சிந்தனை உலகம் பரவலாக அங்கீகாரம் பெற்றுள்ளது.
சிந்தனை, செயல்திறன்கள் இணைந்தால் மட்டும்தான் அது முடியும். இதற்கான, பயிற்சி தொடக்கப்பள்ளியிலிருந்து ஆரம்பிக்கவேண்டியது. ஆனால் இப்போதும் வேலைவாய்ப்புக்காகத்தான் கல்வி என்து இருக்கக் கூடாது. வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தும், மொழியையும் கலாச்சாரத்தையும் பேணி வளர்க்கும் கல்விமுறையை பற்றி நம் சிந்தனையாளர்களும் கல்வி நிபுணர்களும் யோசிக்க தொடங்கவில்லை என்பது வேதனை தருகிறது.
அத்தகைய ஓர் கல்வி சூழ்நிலையில், பொறியியல், மருத்துவம் ஆகியவை கற்கும் மாணவர்கள் கூட தாய்மொழியை விரும்பி கற்க முன்வருவார்கள். வாழ்க்கை சிறக்க தாய்மொழியும் கலாசாரப்பற்றும் நல்வாழ்க்கைக்கு இன்றியமையாதது. இந்த விழிப்புணர்வு பரவும்போது தான் கல்வி உண்மையான முறையில் பலன் அடையும்.
முக்கிய செய்திகள்
மற்றவை
7 hours ago
மற்றவை
13 days ago
மற்றவை
21 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago