குறைகளை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்: மோகன்ஜி

By செய்திப்பிரிவு

செய்தி:>சாலை விபத்து அதிகரிப்பு ஏன்?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மோகன்ஜி கருத்து:

இதற்கு உண்மையிலேயே ஒரு ஆராய்ச்சி கட்டுரை வேண்டும், அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. இருந்தாலும் முக்கியமான சிலவற்றை இங்கே குறிப்பிடலாம்.

முதலில் முறையான சாலைகள் இல்லாமை, குறிப்பாக சாலைகள் அகலமில்லை. வாகனங்களின் எண்ணிக்கை மிக வேகமான அதிகரிப்பு. உரிய இடங்களில் முறையான அறிவிப்பு பலகைகள் மற்றும் எச்சரிக்கை விளக்குகள் இல்லாதது.

அடுத்தது, முறையற்ற, விஞ்ஞான ரீதியில் இல்லாத, வேகத்தடுப்பான்களை அமைத்திருப்பது. காவல்துறையால் அங்காங்கே முறையற்ற வகையில் அமைக்கப்படும் இரும்புத் தடுப்பான்கள், குறிப்பாக காவல் நிலையங்களுக்கு எதிரில். சாலைகளில் ஆங்காங்கே முறையற்ற வகையில் நிறுத்தப்படும் லாரிகள் மற்றும் இதர வாகனங்கள்.

மேலும், வாகனங்களை சாலைக்கேற்றவாறு அல்லாமல் மிகுந்த வேகத்துடன் ஓட்டுவது. தவறான இடங்களில் மற்றும் வகைகளில் வாகனங்களை முந்துதல். முதலில் இத்தகைய குறைகளை அரசும் பொதுமக்களும் புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் அவற்றை களைய முன்வருவார்களேயானால் சாலை விபத்துகள் ஓரளவு குறைய வாய்ப்பிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

7 hours ago

மற்றவை

13 days ago

மற்றவை

21 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மேலும்