அரசியலுக்கு மாணவர்கள் பலிகடா? - விமல்

By செய்திப்பிரிவு

செய்தி:>மாணவர் அமைப்புக்கு தடை: சென்னை ஐஐடி-யை கண்டித்து மறியல்; 100-க்கும் மேற்பட்டோர் கைது

'தி இந்து' ஆன்லைன் வாசகர் விமல் கருத்து:

மத்திய அரசு கேட்ட விளக்கத்துக்கு ஐஐடி நிர்வாகம் விளக்கம் கூறியிருக்கலாம். அல்லது மாணவர்களை அழைத்துப் பேசி இருக்கலாம். அறிவுரை கூறியிருக்கலாம்.. நேராக தடை அறிவித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை! அனைத்துக் கட்சிகளும் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு அரசியல் செய்கின்றனர்!

இதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மோடி ஒருபோதும் அம்பேத்கருக்கு எதிரானவர் அல்ல என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அமைப்பை ஐஐடி தடை செய்ததை அனைத்துக் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் வேறுவிதமாக திசை திருப்பி எடுத்துச் செல்கின்றனர் என்பதை மாணவர்கள் புரிந்துகொண்டு அரசியலுக்கு பலிகடா ஆகாமல் நிர்வாகத்துடன் பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளவேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் அந்நிறுவனத்தின் முதல்வர் முடிவே இறுதியானது என்பதையும் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும். ஆகவே மோடி அரசில் நேரடியாக எதுவும் செய்ய இயலாத எதிர் கட்சிகள் மாணவர் அமைப்புகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றனர்! இதை மாணவர்கள் புரிந்துகொண்டு புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதே சாலச் சிறந்தது! ஜெய் ஹிந்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

15 hours ago

மற்றவை

13 days ago

மற்றவை

21 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மேலும்