கல்வியில் அமெரிக்காவை காப்பியடிக்கலாமே: முத்துக்குமார்

கட்டுரை:>நம் கல்வி... நம் உரிமை!- விதைநெல்லும் நாற்றங்காலும்..

'தி இந்து' ஆன்லைன் வாசகர் பொன்.முத்துக்குமார் கருத்து:

முதலில் இரண்டு விஷயங்களை சர்வாதிகாரத்தனத்தோடு சட்டமாக்க வேண்டும். தமிழகத்தில் படிக்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு வரை கட்டாயமாக தமிழ் படிக்கவேண்டும். எதிர்ப்பு தெரிவிக்கும் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்கள் வேறெந்த மாநிலத்தில் வசதியோ அங்கே போய் பிள்ளைகளை படிக்கவைக்கலாம்.

இங்கே தமிழுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர் வேறு மாநிலத்தில் வேலை பார்க்கும்போது அங்கே அந்த மாநிலத்தின் தாய் மொழியை அம்மாநில அரசின் சட்டத்திற்கு ஒழுங்காக அடங்கி ஒடுங்கி பிள்ளைகளை படிக்கவைக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். (உதாரணம், கர்நாடகாவில் கன்னடம்).

எல்லாவற்றிலும் அமெரிக்காவை ஆவேசத்தோடு காப்பியடித்து பின்பற்றும் நம் கும்பல் அங்கே பள்ளியிறுதி வரை ஆங்கிலம் போதிக்கப்படுவதையோ பெற்றோர்களும் பிள்ளைகளும் எதிர்ப்பின்றி ஆங்கிலம் பயில்வதையோ ஏன் முன்னுதாரணமாக கொள்ளக்கூடாது?

இரண்டு, சேலம், திருச்செங்கோடு பகுதிகளில் பள்ளி என்ற பெயரில் செயல்படும் மாணவத் தொழிற்சாலைகளை ஒழித்துக்கட்ட வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

6 days ago

மற்றவை

13 days ago

மற்றவை

19 days ago

மற்றவை

28 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்