நியூட்ரினோ மையத்தால் மறைமுக பாதிப்பா?- சிங்க ராஜா

By செய்திப்பிரிவு

செய்தி:>நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு நிரந்தர தடை கோரி கிராம மக்கள் போராட்டம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சிங்க ராஜா கருத்து:

கேரளா அரசு முல்லைப் பெரியாறு அணையை பலமுறை இடம் மாற்ற, அங்கு நில அதிர்வு இருப்பதாக கடந்த காலங்களில், அடிக்கடி கூறி வந்தது. தற்போது அதை ஒட்டி மேற்கு தொடர்ச்சிமலையின் ஒரு பகுதியில்தான் இத்திட்டத்திற்கான இடம் வருகிறது. இது கேரளாவிற்கு மிக வசதியாகப் போய்விடும்.

நாளை முல்லைப் பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்று கேரளா அரசு மீண்டும் போர்க்கொடி தூக்க இத்திட்டம் வசதி செய்து கொடுத்துவிடும்.

அப்படியெல்லாம் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. யார் உத்தரவாதம் கொடுப்பது? பின்னால் நிகழப்போகும் பிரச்சினைகளுக்கு பொறுப்பு ஏற்பவர்கள் யார்? திட்ட இயக்குனர் பொறுப்பு ஏற்பாரா? கேரளா அரசு ஏதடா சாக்கு கிடைக்குமென்று காத்துக்கிடக்கிறது.

அணுக்கழிவு மேலாண்மை, அணுக்கழிவு மீதான நியூட்ரினோ ஆய்வு என்பதெல்லாம் கதிர்வீச்சு அபாயம் தருபவை இல்லையா? இத்திட்டத்தால் நேரடியாக மனிதருக்கோ, விலங்கினங்களுக்கோ, பறவைகளுக்கோ எவ்வித பாதிப்பும் நேராது என்று கூறுகின்றார் த.வி.வெங்கடேசன். அப்படியென்றால், மனிதருக்கும், விலங்கினங்களுக்கும், பறவைகளுக்கும் மறைமுகப் பாதிப்புகள் ஏற்படும் என்பதுதானே நிஜம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

12 days ago

மற்றவை

20 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

6 months ago

மேலும்