உதகை: புலியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை அருகே மூன்று பேரைக் கொன்ற புலியை வியாழக்கிழமை நேரில் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

உதகை அருகேயுள்ள தொட்டபெட்டா காப்புக் காட்டை ஒட்டியுள்ள கிராமங்களில் மூன்று பேரை மனித வேட்டை புலி கொன்றது. இதனால் இப் பகுதியில் உள்ள 25 கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். புலியை வேட்டையாட வனத்துறை முதல் அதிரடிப்படையினர் வரை களத்தில் உள்ளனர்.

கடந்த 12 நாட்களாக புலியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புலி கடைசியாக அடைக்கலம் கொண்டுள்ள குந்தசப்பை கிராமத்தில் 24 மணி நேர கண்காணிப்பில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் புலி நடமாட்டம் உறுதியான நிலையில், வியாழக்கிழமையும் தேடுதல் பணி தீவிரமாக நடந்தது. மாலை 4 மணியளவில் வனத்திலிருந்து அதிரடிப்படையினர் மற்றும் வனத்துறையினர் திருப்பினர். மாலை சுமார் 5.30 மணியளவில் ஓடையிலிருந்து தேயிலை தோட்டம் வழியாக புலி நடந்து செல்வதை கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதிரடிப் படையினரோடு வனத்துறையினர் புலியை கிராம மக்கள் கண்ட இடத்தை சுற்றி வளைத்து தீவிரமாகத் தேடினர், ஆனால் புலி தப்பியது.

இந்நிலையில், அருகிலிருந்த சோலையிலிருந்து திடீரென ஒரு கடமான் தேயிலைத் தோட்டம் நோக்கி ஓடி வந்துள்ளது. சிறிது நேரத்தில் மானை துரத்தி வனத்தில் பதுங்கிய புலி, சோலையிலிருந்து வெளியேறியுள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். மீண்டும் புலி சோலைக்குள் ஓடி மறைந்தது.இருள் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தினர். புலி இருக்கும் பகுதி அறியப்பட்டதால் தேடுதல் பணி தீவிரமாகியுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

தொட்டபெட்டா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 25 கிராமங்களில் 45 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு கடந்த 6ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புலி நடமாட்டம் உறுதியானதால் இன்றும் பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

10 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்