டாக்டர்கள் இல்லை.. மருந்து, மாத்திரை இல்லை- குரோம்பேட்டை ஜி.ஹெச்.சில் நோயாளிகள் அவதி

By சி.கண்ணன்

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் குறைவான டாக்டர்கள் எண்ணிக்கை, மருந்து மாத்திரை தட்டுப்பாடு காரணமாக ஆயிரக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இன்னும் இது தாலுகா மருத்துவமனையாக செயல்படுவதே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் அப்பகுதியினர்.

குரோம்பேட்டை அரசு மருத்துவ மனையில் சுமார் 160 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறு கின்றனர். தினமும் 1,500-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். ஆரம்பத்தில் சுமார் நூறு, நூற் றைம்பது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தாலுகா மருத்துவமனையாக தொடங்கப்பட்டது. தற்போது நோயாளிகள் ஆயிரக் கணக்கில் இங்கு வருகின்றனர். ஆனால், இன்னும் தாலுகா மருத் துவமனை என்ற அளவிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப் போதுமான டாக்டர்கள் இல்லை. இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் களுக்கான மருந்து, மாத்திரை களும் தட்டுப்பாடாகவே உள்ளது.

மகப்பேறு டாக்டர்கள் இல்லை

இங்கு தினமும் சராசரியாக 10-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன. மகப்பேறு டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுவதால், அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் பிரசவம் பார்க்க வேண்டியுள்ளது. பிரசவத்துக்குப் பிறகு குழந்தைகளை கவனிக்க குழந்தைகள் நல டாக்டர்களும் இல்லை. பிரசவத்துக்கு வரும் பெண்களை ஊழியர்கள் மரியாதை யாக நடத்துவதில்லை என்ற புகாரும் கூறப்படுகிறது.

புறநகர்ப் பகுதிகளில் விபத்தில் சிக்குபவர்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு வருகின்றனர். ஆனால், இங்குள்ள 24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவில் முதல்கட்ட சிகிச்சை மட்டுமே அளிக்கப்படு கிறது. அதன் பிறகு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்து வமனைக்கு கொண்டுபோகுமாறு பரிந்துரைக்கின்றனர். இதனால், விபத்துகளில் சிக்கி உயிருக் குப் போராடுபவர்களை அப்பகுதி யில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கின்றனர்.

தாமதமாகும் பிரேதப் பரிசோதனை

இங்கு பிரேதப் பரிசோதனைக்கு தனியாக டாக்டர்கள் இல்லை. மற்ற டாக்டர்களே இதையும் செய்ய வேண்டி இருப்பதால் பிரேதப் பரிசோதனை தாமதமாகிறது.

இன்னமும் இது தாலுகா மருத் துவமனையாகவே இருப்பதுதான் இத்தனைக்கும் காரணம். நோயா ளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப இதை தரம் உயர்த்த வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள்.

உலகத் தரத்துக்கு மாற்றம்

இதுபற்றி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (டிஎம்எஸ்) இயக்குநர் சந்திரநாதன் கூறியதாவது:

உலகத் தரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனையாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மாற்றப்பட்டு வரு கிறது. இங்கு 108 ஆம்புலன்ஸ் வசதியுடன் 24 மணி நேர அவசர சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள் ளது. தாலுகா மருத்துவ மனைக்கு தேவையான வசதிகளை விட கூடுதலாகவே பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை அரு கிலேயே இருப்பதால், குரோம் பேட்டை அரசு மருத்துவமனை தரம் உயர்த்த வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

10 days ago

மற்றவை

18 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

6 months ago

மேலும்