1990-களில் பாரத ரத்னா விருது பெற்றவர்கள்

By செய்திப்பிரிவு

1990 - அம்பேத்கர்

(1891 ஏப்ரல் 14 – 1956 டிசம்பர் 6)

நாட்டின் முதல் சட்ட அமைச்சர். இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்த சிற்பிகளில் ஒருவர். பொருளாதார நிபுணர், வரலாற்று ஆய்வாளர், கல்வியாளர் என பன்முகம் கொண்ட அவர், தன் வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடினார்.



1990 – நெல்சன் மண்டேலா

(1918 ஜூலை 18).

தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர். நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தியாகசீலர். 1990-ல் அவரது விடுதலைக்குப் பின் புதிய தென்னாப்பிரிக்க குடியரசு மலர்ந்தது.

1991 - மொரார்ஜி தேசாய்

(1986 பிப்ரவரி 29 – 1995 ஏப்ரல் 10)

நாட்டின் 4-வது பிரதமர். காங்கிரஸ் அல்லாத முதல் அரசை அமைத்தவர். அவரது ஆட்சியில் 1974-ல் முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் உயரிய விருதான நிஷான் –இ- பாகிஸ்தான் விருதைப் பெற்ற ஒரே இந்தியர்.



1991 - ராஜீவ் காந்தி

(1944 ஆகஸ்ட் 20 – 1991 மே 21)

நாட்டின் 6-வது பிரதமர். அவரது ஆட்சியில் அறிவியல், தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.



1991 - சர்தார் வல்லபாய் படேல்

(1875 அக்டோபர் 31- 1950 டிசம்பர் 15)



நாட்டின் முதல் துணை பிரதமர், உள்துறை அமைச்சர். சுமார் 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாக சிதறிக் கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்தவர். அவரது மரணத்துக்குப் பின் பாரத ரத்னா வழங்கப்பட்டது.



1992 – ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா



(1904 ஜூலை 29 – 1993 நவம்பர் 29)



இந்திய விமானப் போக்குவரத்து துறையின் முன்னோடி. நாட்டின் முதல் விமானி. டாடா குழுமத் தலைவராக செயல்பட்ட அவர், டாடா அறக்கட்டளை மூலம் ஆசியாவின் முதல் புற்றுநோய் மருத்துவனையை 1941-ல் மும்பையில் நிறுவினார்.



1992 மெளலானா அபுல் கலாம் ஆசாத்



(1888 நவம்பர் 11 – 1958 பிப்ரவரி 22)



சுதந்திரப் போராட்டத் தலைவர். நாட்டின் முதல் கல்வி அமைச்சர். அவரது பிறந்த நாளான நவம்பர் 11 தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.



1992- சத்யஜித் ரே



(1921 மே 2 – 1992 ஏப்ரல் 23)



மேற்கு வங்க திரைப்பட இயக்குநர். ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர். அவர் இயக்கிய பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபுர் சன்ஸார் ஆகிய திரைப்படங்கள் உலகப் புகழ் பெற்றவை.



1997 – அப்துல் கலாம்



(1931 அக்டோபர் 15)



நாட்டின் 11-வது குடியரசுத் தலைவர். தமிழகத்தைச் சேர்ந்த அவர், 1974-ல் பொக்ரானில் நடத்தப்பட்ட 2-வது அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்காற்றியவர்.



1997 - அருணா ஆஷப் அலி



(1909 ஜூலை 16 – 1996 ஜூலை 29) சுதந்திரப் போராட்ட தலைவர். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது பாம்பே கோவாலியா டேங்க் மைதானத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கொடியை ஏற்றியவர். அவரது மரணத்துக்குப் பின் பாரத ரத்னா வழங்கப்பட்டது.



1997 - குல்சாரி லால் நந்தா



(1898 ஜூலை 4 – 1998 ஜனவரி 15)



சுதந்திரப் போராட்டத் தலைவர். நேரு மறைவின் போதும், லால் பகதூர் சாஸ்திரி மறைவின்போதும் நாட்டின் இடைக்கால பிரதமராகப் பணியாற்றியவர்.



1998 - சிதம்பரம் சுப்பிரமணியம்



(1910 ஜனவரி 30 – 2000 நவம்பர் 7) தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர். அவர் மத்திய வேளாண் அமைச்சராக இருந்தபோது பசுமைப் புரட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.



1998 - எம்.எஸ். சுப்புலட்சுமி



(1916 செப்டம்பர் 16 – 2004 டிசம்பர் 11) தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசைப் பாடகி. இசைத் துறையில் பாரத ரத்னா விருது பெற்ற முதல் நபர். ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படும் ரமோன் மகசேசே விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.



1999- அமர்த்தியா சென்



மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர். 1998-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பொருளாதார தத்துவங்களுக்காக பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.



1999 – கோபிநாத் போர்டோலாய்



(1890- 1950) சுதந்திரப் போராட்டத் தலைவர். அசாமின் முதல் முதல்வர். அவரது தீவிரமான எதிர்ப்பு காரணமாகவே கிழக்கு பாகிஸ்தான் (இப்போதைய வங்கதேசம்) பகுதியுடன் அசாம் இணைக்கப்படுவது தவிர்க்கப்பட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மரணத்துக்குப் பின் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது.



1999 - ஜெயப் பிரகாஷ் நாராயண்



(1902 அக்டோபர் 11 – 1979 அக்டோபர் 8)



பிகாரைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தலைவர். ஜே.பி. என்றும் மக்களின் தலைவர் என்றும் அழைக்கப்பட்டவர். ஜனதா கட்சிக்கு வித்திட்டவர். அவர் தொடங்கிய முழு புரட்சி இயக்கம் நாடு முழுவதும் பெரும் ஆதரவைப் பெற்றது. அவரது மரணத்துக்குப் பின் பாரத ரத்னா வழங்கப்பட்டது.



1999 - பண்டிட் ரவி சங்கர்



(1920 ஏப்ரல் 7 – 2012 டிசம்பர் 11) உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக் கலைஞர். மூன்று முறை கிராமி விருது வென்றவர். இந்திய இசையை மேற்கத்திய நாடுகளில் பிரபலப்படுத்தியவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

2 days ago

மற்றவை

5 days ago

மற்றவை

6 days ago

மற்றவை

17 days ago

மற்றவை

22 days ago

மற்றவை

29 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மேலும்