உண்மையைப் பகரும் தி இந்து

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டு வரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல்லை தொடர்ந்து தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் சா.செல்வராஜ் பேசியதாவது:

பத்திரிகைக்கு தர்மம் வேண்டும். நடுநிலையே நல்ல பத்திரிகை தர்மம். நடுநிலையை தவற விடும் நாளேடு விழுந்து விடும். கடந்த ஓர் ஆண்டில் நான் உணர்ந்ததில் உண்மையை பகருவோம் என சிரத்தை எடுக்கின்ற பத்திரிகையாக 'தி இந்து' இருப்பதில் பெருமிதம் அடைகிறேன்.

பூச்செண்டு, ஊர்வலம், கருத்துபேழை, மாநிலம், தேசம், சர்வதேசம், வணிகம் என நாளேட்டில் பக்கங்களை வரிசைப்படுத்துதலே அழகு சேர்க்கிறது.

மது விலக்கு

'மெல்லத் தமிழன் இனி..' தொடர் இப்போது என்னை ஈர்த்திருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன் மதுவிலக்கு அமலில் இருந்தது. அப்போது கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை சொற்பம் தான். அரசு மதுபானக் கடைகளால் இப்போது இறப்பு விகிதம் அதிகரித்து விட்டது. சிறுவர்கள் கூட மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். இந்த நேரத்தில் இந்த தொடர் வருவது பாராட்டுக்குரியது. ஏராளமான இளைஞர்கள் கெட்டுப் போயுள்ளனர். திசைமாறிச் செல்லும் பறவைகளான இளைஞர்களின் இந்த நிலையை மாற்றும் பத்திரிகை 'தி இந்து' என்றார் அவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE