8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வு: மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

திறனாய்வுத் தேர்வு எழுதும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் முறையாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பள்ளிகளில் படிக்கும் திறமையான மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக தேசிய திறனாய்வுத் தேர்வு, தேசிய வருவாய் மற்றும் திறன் தேர்வு, கிராமப்புற மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு என பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தேசிய வருவாய் மற்றும் திறன் தேர்வு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் தேர்வு ஆகும். இந்த தேர்வை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் மட்டும் எழுதலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

மாதம் ரூ.500 உதவித் தொகை

இந்த தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகை வழங்கப்படும். தேசிய வருவாய் மற்றும் திறன் தேர்வு மூலமாக தமிழ்நாட்டில் 6,695 பேருக்கு உதவித் தொகை கிடைக்கும்.

2014-ம் ஆண்டுக்கான தேர்வு வரும் பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு 57 ஆயிரம் பேர் திறனாய்வுத் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு திறனாய்வுத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேர்வுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சிறப்பு பயிற்சி

ஒரு பள்ளியில் இருந்து குறைந்தது 10 மாணவர்களை தேர்வு எழுதச் செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் அறி வுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். திறனாய்வுத் தேர்வில் அதிக மாணவர்களை பங்கெடுக்கச் செய்யுமாறு மாநகராட்சி கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத் துறை கடிதமும் அனுப்பியுள்ளது.

திறனாய்வுத் தேர்வு, வழக்கமான பாடத் தேர்வு போல் இல்லாமல் மாணவர்களின் சிந்தனைத் திறன் மற்றும் படைப்பாற்றலை அறியும் வகையில் அமைந்திருக்கும். இதை கருத்தில் கொண்டு திறனாய்வுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல்முறையாக சிறப்பு பயிற்சி அளிக்க அரசு தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன (டயட்) முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர். அதைத் தொடர்ந்து, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் திறனாய்வுத் தேர்வு குறித்து மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்து வார்கள் என்று அரசு தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

6 months ago

மற்றவை

6 months ago

மேலும்