ஆட்டோ பாரு… ஆட்டோ பாரு…!

By சி.கதிரவன்

தமிழக ஆட்டோக்கள் டிஜிட்டல் மீட்டர் மயமாகி வரும் வேளையில், பழைய ஆட்டோ மீட்டர் ஒன்றை பரிசாகப் பெறுவதற்காக 10 நாள்கள் சாகசப் பயணம் மேற்கொண்டுள்ளனர் அயல் நாடுகளைச் சேர்ந்த சாகச விரும்பிகள்.

புலி, குதிரை, பட்டாம்பூச்சி போன்ற வேடங்களை அணிந்தபடி, விதவிதமான வண்ணங்கள் தீட்டப்பட்ட ஆட்டோக்களை ஓட்டியவாறு சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் தஞ்சையை கடந்துசென்ற அயல் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு, வழிநெடுகிலும் பொதுமக்கள் கைகளை அசைத்து தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

ஆட்டோக்களில் புலி, குதிரை, பட்டாம்பூச்சி போன்ற வேடங்களை அணிந்தபடியும், சில இளம்பெண்கள், இளைஞர்கள் தமிழக ஆட்டோ ஓட்டு நர்களின் “காக்கி” சீருடை, பேட்ஜ் ஆகியவற்றை அணிந்தபடியும் இருந்தனர்.

தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றிப்பார்த்த அவர்கள், மீண்டும் அங்கிருந்து புதுக்கோட்டை, திருமயம், மேலூர் வழியாக தூத்துக்குடி, குற்றாலம், கன்னியாகுமரி கடந்து, ஜன.7-ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பயணத்தை நிறைவு செய்கின்றனர்.

“எங்களது டிராவல் சயின்டிஸ்ட் நிறுவனத்தின் “ஆட்டோ ரிக் ஷா சேலஞ்ச்” என்ற இணையதளத்தைப் பார்த்து, கட்டணம் செலுத்தி பதிவு செய்யும் பல நாடுகளைச் சேர்ந்த சாகச விரும்பிகளுக்காக கடந்த 7 ஆண்டுகளாக இதுபோன்ற பயணத்தை நாங்கள் நடத்துகிறோம். 18 வயதடைந்த, ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களே ஆட்டோக்களை ஓட்ட லாம். பெற்றோருடன் வரும் பதின்பருவத்தினர் ஆட்டோக்களில் அமர்ந்து செல்லலாம். செல்லும் வழியில் அப்பகுதி மக்களின் பண்பாட்டு மதிப்பீடுகளை மீறாமல், சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்பது போன்ற பொது விதிகளைப் பின்பற்ற வேண்டும். எங்களிடம் உள்ள ஆட்டோக்களை, அவர்கள் விரும்பும் வண்ணங்கள், டிசைன்களில் வடிவமைத்துத் தருகிறோம். இதுபோல ஆண்டுக்கு 5 பயணங்களை, பல்வேறு வழித்தடங்களில் நடத்து கிறோம்.

பயணத்தின் இடையிடையே வரலாற்றுச் சின் னங்கள், ஆடை அலங்காரம், பாதுகாப்பாகவும் விரை வாகவும் ஆட்டோ ஓட்டுதல், கேளிக்கை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் அதிக புள்ளிகள் பெரும் அணிக்கு புதிதாக வண்ணம் தீட்டிய பழைய ஆட்டோ மீட்டரைக் கொண்டு உருவாக்கப்பட்ட வெற்றிக்கோப்பை வழங்கப்படும்.

பயணத்தின் இடையில், கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் செல்லும் இக்குழுவினர், குழந்தைகளுக்கு பரிசளிப்பதோடு, அவர்களுக்கென உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு இதுவரை 165 யூரோக்கள் வழங்கியுள்ளனர்” என்கிறார் நிறுவனத்தின் உரிமையாளர் பீ. அரவிந்த்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

8 days ago

மற்றவை

16 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்