திருநெல்வேலியில் இருந்து, ராஜ வல்லிபுரம் நோக்கி பயணிக்கையில் சாலையின் இருபுறமும் பச்சை பசேலென வளர்ந்து நிற்கும் மரங்களைப் பார்க்கலாம். ராஜவல்லிபுரத்தில் நுழைந் ததுமே பசுஞ்சோலைக்குள் நுழைந்த உணர்வு அப்பிக் கொள்ளும். இத்தகைய பசுமைச் சூழலை உருவாக்கியவர் இதே ஊரைச் சேர்ந்த அர்ஜுனன்.
46 வயதாகும் அர்ஜுனன் கடந்த 13 வருடங்களாக தமிழகம் முழுவதும் தன் சொந்தச் செலவிலேயே பயணித்து மரக்கன்றுகளை நட்டு வருகிறார். இவரை இப்படி இயற்கை ஆர்வலராக மாற்றியது யார் தெரியுமா? இவரது மகன்! இதற்கு முன்பு அர்ஜுனன் ஓடும் ரயிலில் தேநீர் விற்றவர். பிறகெப்படி இப்படி இயற்கை நேசரானார்? அதை அவரே விவரிக்கிறார்.
சோகத்தை விலக்கிய மரம்
“நெல்லை எக்ஸ்பிரஸில் டீ வியா பாரம் பார்த்தப்ப, பயணிகளிடம் ஒரு வியாபாரியா இல்லாம குடும்பத்து ஆள் மாதிரி பாந்தமா விசாரிச்சு டீ வியாபாரம் பண்ணுவேன். அதனால, எனக்கு ரயில் சிநேகம் அதிகம். அமைதியா போயிட்டு இருந்த என்னோட வாழ்க்கையில 2003-ம் வருசம் சூறாவளி அடிச்சுது. என்னோட ஒன்றரை வயசு பையன் செல்லம், பால் குடிக்கும்போது புரையேறி இறந்துட்டான். அதுக்கப்புறம் எனக்கு வாழ்க்கை மீது வெறுப்பு தட்டிருச்சு. ரயிலில் டீ விற்கப் போகல. அதனால, வாடிக்கையா என்னோட டீயை குடிச்ச வங்க, என்னைத்தேடி வீட்டுக்கே வந்துட்டாங்க.
நடந்தத கேள்விப்பட்டு எனக்கு ஆறுதல் சொன்னவங்க, ‘இப்டியே முடங்கிக் கிடக்காத; வெளியில வா. உம் பையனை நினைச்சு ஒரு மரக்கன்றை நட்டு வெச்சு வளரு. அது உன்னோட கவலையை குறைக்கும்’னு சொன்னாங்க. அவங்க சொன்னபடியே ஒரு மரத்தை நட்டு வெச்சு தண்ணி ஊத்துனேன். அப்பத்தான், ஒரு மரம் போதாது, நம்மால் முடிஞ்சவரை மரங்களை வளர்த்து இயற்கை சூழலை விருத்தியாக்கணும்னு தோணுச்சு.’’ என்கிறார் அர்ஜுனன்.
90 நாளில் மரம்
நாற்றங்கால் முறையில் மரம் வளர்க்கும் இவர், ஒரு முறைக்கு 100 மரங்களின் கிளையை சுமார் 8 அடி நீளம் வருமாறு வெட்டி எடுத்து அதை சாக்குப் பைகளில் பக்குவமாய் பதியன் போடுகிறார். அதிகபட்சம் இரண்டு வாரங்களில் பதியன் துளிர்விட ஆரம்பித்து விடுகிறது. 90-வது நாளில் வேர்கள் பலப்பட்டு நூறாவது நாளில் பக்க வாட்டுக் கிளைகளும் விட ஆரம்பித்துவிடும்.
நாற்றங்கால் முறையில் மரம் வளர்க்கும் இவர், ஒரு முறைக்கு 100 மரங்களின் கிளையை சுமார் 8 அடி நீளம் வருமாறு வெட்டி எடுத்து அதை சாக்குப் பைகளில் பக்குவமாய் பதியன் போடுகிறார். அதிகபட்சம் இரண்டு வாரங்களில் பதியன் துளிர்விட ஆரம்பித்து விடுகிறது. 90-வது நாளில் வேர்கள் பலப்பட்டு நூறாவது நாளில் பக்க வாட்டுக் கிளைகளும் விட ஆரம்பித்துவிடும்.
‘‘பொதுவாக மரக்கன்றுகளை மண்ணில் நேரடியாக வைத்து இந்த உயரத்துக்கு வளர்க்க ணும்னா இரண்டு வருடம் ஆகிவிடும்’’ என்று சொல்லும் அர்ஜுனன், ‘‘90 நாளில் எட்டு அடி உயர மரக்கன்று கிடைத்து விடுவதால் இதை பூமியில் நட்டு பராமரிப்பதும் எளிது. அசோகர் இந்த முறையில் தான் சாலையோர மரங்களை நட்டார்.
அம்மன் சேலை அரண்
இப்படி வளர்த்த மரங் களை நானே பக்கத்து ஊர் களுக்குக் கொண்டுபோய் இலவசமா குடுத்துட்டு இருக்கேன். ஆர்வத்தோட கேக்குறவங்களுக்கு, மரம் வளர்க்கும் பக்குவத்தையும் சொல்லிக் கொடுக்கிறேன். தளிர்களை ஆடு - மாடுகள் கடிக்காம இருக்கிறதுக்காக, அம்மன் கோயில்கள்ல அம்மனுக்கு சாத்துன பழைய சேலைகளை வாங்கிட்டு வந்து மரக்கன்று களை சுற்றிக் கட்டி வைப்பேன்.’’ என்கிறார்.
தான் வளர்த்த மரத்தின் அருகே..
இயற்கையை போற்றுவதற்காக, ‘செப்பறை வளபூமி பசுமை உலகம்’ என்ற அமைப்பை நடத்தி வரும் அர்ஜுன னுக்கு ‘நீர்வழிச்சாலை’ என்ற அமைப்பு சிறந்த சமூக ஆர்வலர்’ என்ற விருதை தமிழக ஆளுநர் கையால் வழங்கி கவுரவித்திருக்கிறது. தண்ணீர் வசதி, போதிய செம்மண், தேவையான சாக்குப் பைகள் இவைகளை நீங்களும் தரமுடியும் என்றால் உங்கள் ஊரிலேயே தங்கி 1000 மரங்களை இலவசமாக வளர்த்துக் கொடுக்கத் தயார் என்கிறார் அர்ஜுனன்.
அழைப்புக்கு: 9791426281
முக்கிய செய்திகள்
மற்றவை
4 days ago
மற்றவை
12 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
5 months ago