தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்பவும் கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரசு கலைக் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில்தான் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தியது. சான்றிதழ் விவரங்களை ஆய்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.
இப்பணி முடிந்ததும் உடனடியாக மதிப்பெண் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து, அடுத்தகட்டத் தேர்வான நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் அனைத்து அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப கல்லூரிக் கல்வி இயக்ககம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் பேராசிரியை டி.செந்தமிழ்ச்செல்வி கூறியதாவது:
தமிழகத்தில் 81 அரசு கலைக் கல்லூரிகளும், 163 அரசு உதவிபெறும் கல்லூரிகளும் செயல்படுகின்றன. அரசு கலைக் கல்லூரிகளில் 1093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது.
3,120 காலியிடங்கள்
அரசு உதவிபெறும் கல்லூரிகளைப் பொறுத்தவரை, காலியாக உள்ள 3,120 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து, 2,400 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 780 காலியிடங்களை நிரப்பும் பணி தற்போது நடந்து வருகிறது.
இவ்வாறு செந்தமிழ்ச்செல்வி கூறினார்.
முக்கிய செய்திகள்
மற்றவை
8 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
5 months ago