40,000 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி- சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதியில் முதல் கட்டமாக 40 ஆயிரம் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்த மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தண்டையார்பேட்டை, ராய புரம், திரு.வி.க. நகர், அண்ணா நகர், அடையார், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது.

திருவொற்றியூர், மணலி, மாத வரம், வளசரவாக்கம், அம்பத் தூர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய விரி வாக்கப்பட்ட மண்டலங்களிலும் தெரு நாய்களின் தொல்லை மிக அதிகமாக உள்ளது.

நடந்து செல்பவர்களை மட்டு மல்லாமல், இரு சக்கர வாகன ஓட்டிகளைக்கூட மிகுந்த அச்சத்துக்குள்ளாக்கும் வகை யில் தெரு நாய்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றி வரு கின்றன.

கடந்த ஓராண்டுக்கு முன் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, சென்னை மாநகராட்சி பகுதிகளில் 1.75 லட்சம் தெரு நாய்கள் சுற்றித் திரிவதாக தெரிய வந்துள்ளது.

மாநகராட்சியால் தினந் தோறும் பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு தொண்டு நிறு வனங்கள் மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப் படுவதோடு, வெறி நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாய் தொல்லை தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

எனவே, பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் முதல் கட்டமாக 40 ஆயிரம் நாய் களுக்கு வெறி நோய் தடுப் பூசி செலுத்துவதற்கான நடவடிக் கையில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்த தாவது:

சென்னையில் அதிகரித்துள்ள தெரு நாய் தொல்லையால் பொது மக்கள் மிகுந்த அவதிக்குள் ளாகி வருகின்றனர்.

எதிர்பாராதவிதமாக தெரு நாய்களால் கடிபடும் பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமலிருக்க அவற்றுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்து வதற்கு மாநகராட்சி முடிவு எடுத்துள்ளது.

அதன்படி, வெறிநோய் தடுப் பூசிகள் வரவழைக்கப்பட்டுள் ளதை அடுத்து, முதல்கட்டமாக 40 ஆயிரம் தெரு நாய்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த திட்ட மிடப்பட்டுள்ளது.

இவற்றை தொண்டு நிறுவனங் களின் ஒத்துழைப்புடன் தெரு நாய்களுக்கு செலுத்த முடிவு செய் துள்ளோம்.

எந்த பகுதிகளில் நாய்கள் அதிகமாக இருக்கின்றன என் பதையெல்லாம் கணக்கெடுத்து அதற்கேற்ப தெரு நாய்களுக்கு தடுப்பூசிகளை செலுத்துவதற் கான நடவடிக்கையில் இறங்கி வருகிறோம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE