சுட்டுக் கொன்னாலும் சொல்ல மாட்டேன்..

By செய்திப்பிரிவு

கருப்பு பணம் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள் பற்றிய ரகசியங்களை சுவிஸ் வங்கி நிர்வாகம் எந்த அளவுக்கு காப்பாற்றுகிறது என்பதை விளக்கும் விதத்தில் ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுதி இருக்கும் சிறுகதையின் சுருக்கம்...

நைஜீரிய நாட்டின் புதிய நிதி அமைச்சர் இக்னாசியஸ் அகர்பி. மிகவும் நேர்மை யானவர். ஊழலை அறவே பிடிக்காது. தான் குடும்பத்துடன் செல்லும் பயணங்களுக்கு கூட அரசு பணத்தை தொட மாட்டார். தனது சொந்தப் பணத்தை மட்டுமே செலவு செய்பவர். அதிரடி நடவடிக்கைகள் மூலம் அரசியல்வாதிகள், தொழிலதி

பர்களின் ஊழலை அம்பலப் படுத்தி குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலம் ஆனவர்.

நாட்டின் அதிபருக்கு இவர் மீது நல்ல நம்பிக்கை. ஸ்விஸ் வங்கியில் பணக்காரர்கள் பதுக்கியிருக்கும் பணத்தை கண்டுபிடித்து மீட்க இவர்தான் சரியான ஆள் என முடிவு செய்கிறார். அந்தப் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறார். நைஜீரிய அரசியல்வாதிகளின் கருப்பு பணத்தை எப்படியாவது கண்டுபிடிக்கும்படி கூறி அவரை ஸ்விட்ஸர்லாந்து அனுப்புகிறார்.

அதிபரின் உத்தரவுப்படி ஸ்விஸ் வருகிறார் அகர்பி. சம்பந்தப்பட்ட ஸ்விஸ் வங்கிக்கு செல் கிறார். கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் தனது நாட்டவரின் பட்டியலைக் கேட்கிறார். அதெல்லாம் மிகவும் ரகசியமான விஷயம். யார் கேட்டாலும் தர மாட்டோம் என மறுக்கிறார் வங்கி நிர்வாகி.

நைஜீரியா எவ்வளவு ஏழை நாடு என்பது உங்களுக்குத் தெரியும். அங்குள்ள மக்கள் பசி, பட்டினியோடு வாழ்கிறார்கள். அவர்களை சுரண்டிக் கொழுத்த பணத்தை அவர் களுக்கே செலவிட உதவுங்கள் என கெஞ்சுகிறார் அமைச்சர் அகர்பி.

அதெல்லாம் உங்கள் பிரச்சினை. அதற்கும் எங்களுக்கும் சம்பந்த மில்லை. எங்கள் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை தரும் வழக்கம் எங்களுக்கு இல்லை. கிளம் புங்கள் என மறுக்கிறார் வங்கி நிர்வாகி. இப்படி எல்லாம் கேட்டால் நீ சரிப்பட்டு வர மாட்டாய் என கோபத்துடன் துப்பாக்கியை எடுத்து நிர்வாகியின் நெற்றிப் பொட்டில் வைக்கிறார் அகர்பி.

தாராளமா சுட்டுக்கோ. நீ சுட்டாலும் நீ கேட்ட ரகசிய தகவல தரவே மாட்டேன் என உறுதியாக சொல்லி விடுகிறார் வங்கி நிர்வாகி.

அப்படியா... என சந்தோஷத்துடன் தான் கொண்டு வந்திருந்த சூட்கேஸை திறக்கும் அகர்பி, இந்தா இதுல 50 லட்சம் டாலர் இருக்கு. இத நான் இங்க முதலீடு செய்றேன்... என்கிறார். அத்தனை பணமும் யாருக்கும் தெரியாமல் ஊழலில் சேர்த்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

12 days ago

மற்றவை

20 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

6 months ago

மேலும்