ஜனநாயகம் தழைத்தோங்கும் கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்கம்!

By செ.மி.கோலன்

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை விரும்பியோரின் எண்ணிக்கை - 2 லட்சத்து 60 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.

இன்றைய நிலவரப்படி, தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம், ஃபேஸ்புக் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு (வெரிஃபைடு) 2 லட்சம் லைக்குகளை எட்டிய சிறப்பைப் பெற்றுள்ளது.

தேர்தல் பிரச்சார நேரத்தில், இணையவாசிகளுடன் தொடர்பில் இருக்கவும், அவர்களுடன் பிரச்சாரக் கருத்துகளைப் பகிரவும் முழுவீச்சில் செயல்படத் தொடங்கிய கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்கம் இன்றும் அவ்வப்போது அப்டேட்டுகளுடன் ஆக்டிவாக இருக்கிறது.

தனது அறிக்கைகள், பேட்டிகளை பத்திரிகைகளுக்கு அனுப்பும் கையோடு, அவற்றை உடனுக்குடன் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்கிறார் கருணாநிதி. குறிப்பாக, அரசியல் பரபரப்புகள் இல்லாத நேரத்தில் 'அரிய படம்' என்ற பெயரில் பழைய புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

அத்துடன், தற்போதைய அரசியல், நடப்புச் சூழலை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் 'குறிப்பால்' உணர்த்தக்கூடிய கருணாநிதி உதிர்த்த 'பொன்மொழிகள்' பகிரப்படுகின்றன. அந்த வகையில், இன்று பகிரப்பட்ட பொன்மொழி: "தவறு செய்ய ஆரம்பிக்கிறவனுக்கு அஸ்திவாரத்திலேயே ஏற்படுவதைவிட அதிக அச்சம் உச்சி போய்ச் சேரும்போதுதான் தோன்றுகிறது."

திமுக தலைவர் >கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்கம் வசமுள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், அதில் தழைத்தோங்கும் 'ஜனநாயகம்'தான். கருணாநிதியின் ஒவ்வொரு நிலைத்தகவலின் கீழேயும் பாராட்டுகளுக்கு சற்றும் குறைவில்லாத விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கடுமையாக விமர்சிக்கப்படும் கருத்துகள் கூட அனுமதிக்கப்படுவதுதான்.

அத்துடன், ஓர் அரசியல் தலைவரின் அதிகாரப்பூர்வ தளத்துக்குச் சென்று, இணையவாசிகள் நேரடியாகவே துணிச்சலான விமர்சனங்களை முன்வைக்கும் போக்கும் கவனிக்கத்தக்கது.

உதாரணத்துக்கு, கருணாநிதியின் ஸ்டேட்டஸ்களும் கருத்துகளும் சில:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE