உள்ளாட்சி: அவர்கள் பணத்துடன் வரப் போகிறார்கள்... என்ன செய்யலாம் நாம்?

By டி.எல்.சஞ்சீவி குமார்

தமிழகத்தின் அரசியல் சூழல் தொடர் பான விவாதங்களின் தகிப்பு இன்னும் தணியவில்லை. மக்கள் தங்கள் பிரச்சினைகளை மறந்து, அரசியல் பேசுகிறார்கள். சமூக ஊடகங் களில் மட்டுமல்ல; பொதுஇடங்களிலும் அரசியல் பேசுகிறார்கள். அரசியல் அறியாதோரும் அரசியல் பேசுகிறார் கள். அரசியல் என்று தெரியாமலேயே அரசியல் பேசுகிறார்கள்.

‘குறிப்பிட்ட கும்பலின் மீதான கோபம்’என்கிற வெறுப்பரசியலுடன் மட்டுமே இந்த விவாதங்கள் முற்று பெற்றுவிட்டால் இதனை நாம் புறந் தள்ளிவிடலாம். ஆனால், விரும்பாத ஒருவரின் பிம்பத்தில் தொடங்கும் விவாதம், ஊழல் எப்படி உருவாகிறது? ஊழலில் அரசியல்வாதிகளின் பங்கு என்ன? அதிகாரிகளின் பங்கு என்ன? மக்களின் பங்கு என்ன? யாரெல்லாம் அரசியலுக்கு வர வேண்டும்? யாரெல் லாம் வரக்கூடாது, உள்ளாட்சித் தேர்த லில் ஊழல் கட்சிகள் ஓட்டு கேட்டு வந் தால் என்ன செய்யலாம்? தமிழகத் தில் மதுவிலக்கு சாத்தியமா? இலவசங் கள் தேவையா? ஓட்டுக்காக பணம் வாங்குவது சரியா? மக்கள் பிரதிநிதி களைத் திரும்பப் பெறுவதற்கான சட்டம் கொண்டு வர முடியுமா என்று பல கிளைகளாக விரிகின்றன விவாதங்கள்.

இவை எல்லாவற்றையும்விட எவ் வளவோ எதிர்ப்பை காட்டியும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களை மதிக்காதது அவர்களை சொல்லவிய லாத அவமானத்தில் ஆழ்த்தியிருக் கிறது. ஓட்டு போட்டதற்காக மனப் புழுக்கத்தில் தவிக்கிறார்கள். குறிப் பாக, ‘ஓட்டுக்கு பணம்’ என்கிற விஷயம் மக்களை மிக அதிகமாக சிந்திக்க வைத் திருக்கிறது. சுமார் அரை நூற்றாண்டு காலமாக தேக்கமடைந்து, அழுகி நாற்றமெடுக்கும் தமிழக அரசியல் சூழலுக்கு இந்தச் சிந்தனை மிகவும் தேவையான ஒன்று. அரசியல் சொரணையற்ற நிலையில் இருந்து விடுபட துடிக்கிறது வெகுஜனம். தமிழக அரசியலில் மிக முக்கியமான, கவனிக் கத்தக்க காலகட்டம் இது. சொல்லப் போனால் தமிழக மக்கள் தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளத் தயாராகிவருகிறார்கள். சுயப் பரிசோதனைக்கான களமே உள்ளாட்சித் தேர்தல்!

ஆனால், தமிழகத்தை ஆளுகின்ற, ஆளத் துடிக்கின்ற பிரதான கட்சிகளுக்கு வழக்கம்போல மக் களின் இந்த எண்ண ஓட்டத்தைப் பற்றி சிறிதும் பிரக்‌ஞை இல்லை. அவை குதிரைக்கு பக்கவாட்டில் கண்ணைக் கட்டிவிட்டதுபோல பணத்தை நம்பியே ஓடிக்கொண்டி ருக்கின்றன. ஊராட்சியின் ஓட்டுக்கு ஒரு விலை, ஒன்றியத்தின் ஓட்டுக்கு ஒரு விலை, மாவட்டப் பஞ்சாயத்தின் ஓட்டுக்கு ஒரு விலை, பேரூராட்சிக்கு இவ்வளவு, நகராட்சிக்கு இவ்வளவு, மாநகராட்சிக்கு இவ்வளவு என்று திரைமறைவு மாட்டுத் தரகில் மும்முரமாகியிருக்கிறார்கள். மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகள் நேரடி தேர்தல் நியமனம் ரத்து செய்யப்பட்டதால் குதிரை பேரங்கள் கோடிகளிலும் லட்சங்களிலும் அனல் பறக்கின்றன.

இங்கே ஒரு அரசியல் கதை சொல்லவா? உண்மை சம்பவம்தான். பல்லடம் ஒன்றியத்தில் இருக்கிறது செம்மிப்பாளையம் கிராமப் பஞ் சாயத்து. பெரியதாக ஆட்கள் நடமாட் டம் இல்லை. தெருவில் வைக்கப் பட்டிருந்த பெரிய காற்றாடி ஒன்று கிரீச் கிரீச் என்று தனது துருப் பிடித்த துயரத்தை சொல்லிக் கொண்டிருக்கிறது. தெருவோரம் இயற்கை எரிவாயு கலன்கள் பாழ டைந்துக் கிடக்கின்றன. மரக் கழிவில் இருந்து மரபு சாரா மின்சாரம் தயாரித்த நிலையத்துக்கு பெரியதாக பூட்டு போடப்பட்டிருக்கிறது. வீட்டு மனைக்காக லே-அவுட் போடப்பட்ட குடியிருப்பு காலி மனைகள் பாலை வனம் போல காட்சியளிக்கின்றன. மொத்தத்தில் கைவிடப்பட்ட குடி யிருப்புபோல பரிதாபமாக காட்சி யளிக்கிறது செம்மிப்பாளையம். மிகைப்படுத்தவில்லை, இப்போது நீங்கள் சென்றாலும் பார்க்கலாம்.

எப்படி இருந்த கிராமப் பஞ்சாயத்து தெரியுமா இது? 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தின் முன்மாதிரி கிராமம் இது. இதோ பாழடைந்துக் கிடக்கும் இயற்கை எரிவாயு கூடத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தியாகி ஊருக்கே உலை கொதித்தது. காற்றாடி தொழில்நுட்பம் மூலம் மின் உற்பத்தி செய்து மேல்நிலைத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றிய தமிழகத்தின் முதல் கிராமம் அது. நான்கு ஆண்டுகளாக 100 சதவீதம் முழுமையான வரி வசூல் செய்து அரசு ஊக்கத் தொகை பெற்ற கிராமம் அது. வறட்சிக்கு இலக்காகும் கிராமங்கள் திட்டத்தின் கீழ் ஆறு புதிய குட்டைகளை உருவாக்கிய கிராமம் அது. சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, மரக் கழிவில் இருந்து மின்சாரம் தயாரித்த கிராமம் அது. மேலே சொன்னவற்றில் இன்று ஒரு திட்டம் கூட இல்லை.

இந்த திட்டங்களை செயல்படுத்திய முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் பொன்னுசாமி ஒருகாலத்தில் பிரபலமானவர். மத்திய அரசு, மாநில அரசின் விருதுகளுடன் வலம் வந்தவர், இப்போது விரக்தியுடன் வலம் வருகிறார்.

“எலெக்‌ஷன்ல காசை இறக்கி ஊரையே நாசமாக்கிட்டானுங்க. 10 வருஷங்களுக்கு முன்னாடி உள்ளாட்சித் தேர்தல்ல, அதுவும் கிராமப் பஞ்சாயத்துல எல்லாம் ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டாங்க, மக்களும் வாங்கவும் மாட்டாங்க. 2006-ல் புதுப் பழக்கமா ஒரு ஓட்டுக்கு 300 ரூபாய் கொடுத்தாங்க. கொடுத்த காசை லாபத்தோட எடுக்க வேணாமுங்களா? நிலத்தடி நீரை உறிஞ்சி தனியார் தண்ணீர் பேக்டரி நடத்துறாங்க. மாசம் 30 ரூபா வரியில நான் கொடுத்த குடிதண்ணியை ஒரு கேன் 30 ரூபாய்க்கு கொடுக்குறாங்க. எல்லா திட்டமும் நின்னுபோய் ஊர் பாழடைஞ்சுக்கிடக்குதுங்க. இதோ வர்ற எலெக்‌ஷன்லயும் பணத்தை இறக்க தயாரா இருக்காங்க. ஒரு ஓட்டுக்கு ஐநூறு, ஆயிர முன்னு பேசிக்கிறாங்க. மக்கள்தான் பதில் சொல்லோணுமுங்க...” என் கிறார்.

இதோ அவர்கள் பணத்துடன் வரப் போகிறார்கள்... என்ன செய்ய லாம் நாம்?

- தொடரும்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

16 days ago

மற்றவை

16 days ago

மற்றவை

19 days ago

மற்றவை

20 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மேலும்