வண்ணங்களும் விலங்குகளும்

விஷ்வக் சேனன். ஐந்தாம் வகுப்பு மாணவன். மேலே இருக்கும் புகைப்படங்களுக்குச் சொந்தக்காரன் இவன்தான். ஒரு தேர்ந்த காட்டுபிரியலாளரைப் போலப் பறவைகளைப் பற்றிப் பேசுகிறான். சில குறிப்பிட்ட பறவைகளுக்கென்று உள்ள தனித்துவமான பண்புகளைப் பற்றிச் சொல்கிறான். அதைப் படமெடுக்க அலைந்த அனுபவத்தை ஒரு முதிர்ந்த காட்டுயிர் புகைப்படக் கலைஞன்போல் விவரிக்கிறான்.

சுற்றுலாவுக்குச் சென்றிருந்தபோது தற்செயலாகக் கைகளில் கிடைத்த தன் தந்தையின் கேமராவால் தனக்குப் பிடித்தவற்றையெல்லாம் படம் எடுக்கத் தொடங்கியிருக்கிறான் விஷ்வா. அப்படங்களைக் கண்ட அவனது பெற்றோர்கள் அவனுக்குப் புகைப்படக் கலையைப் பயிற்றுவித்திருக்கிறார்கள்.

விஷ்வாவின் புகைப்பட ஆர்வத்தாலும் பெற்றோர்களின் அக்கறையாலும் அவன் சிறு வயதிலேயே புகைப்படக் கலைஞனாகிவிட்டான். இந்தியாவிலுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளான். பிரம்மாண்டமான விலங்குகள் கர்ஜனைபுரியும் காட்சிகள், யானைகளின் விளையாட்டு, மான்களின் துள்ளல், பறவைகளின் நடனம், சிறிய பூச்சிகளின் வாழ்க்கை எனப் புகைப்படக் கலைஞர்களிடம் எளிதில் சிக்காத புகைப்படங்களின் தொகுப்பு வியப்பைத் தருகின்றன. இப்படங்களுக்கு மத்தியில் நின்று, “பறவைகளின் வண்ணமும் செயல்பாடுகளும் என்னைப் படமெடுக்க வைத்தன” என மிக எளிமையாகச் சொல்கிறான் விஷ்வக் சேனன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE