நிலுவையில் 12 கோடி வழக்குகள் : உயர்நீதிமன்ற நீதிபதி

இந்தியா முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 12 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி தனபாலன் கூறியுள்ளார்.

அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மற்றும் திரு வண்ணாமலை மாவட்டங்க ளுக்கான ஒருங்கிணைந்த 6 நீதி மன்றங்களை விழுப்புரத்தில் சனிக்கிழமை உயர்நீதிமன்ற நீதிபதி தனபாலன் திறந்து வைத்தார்.

மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன்றம், மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்க இரண்டு நீதிமன்றங்கள், ஒரு மகளிர் விரைவு நீதிமன்றம், ஒரு நில மோசடி தடுப்பு கோர்ட் மற்றும் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் என்று 6 நீதிமன்றங்கள் திறந்து வைக்கப்பட்டன.

அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ங்களை ஒருங்கிணைத்து நில மோசடி தடுப்பு நீதிமன்றம் மற்றும் லஞ்ச ஊழல் தடுப்பு நீதிமன்றமும் இயங்க உள்ளன.

விழாவில் மாவட்ட நீதிபதி கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். உயர்நீதிமன்ற நீதிபதி தனபாலன், ரவிசந்திரபாபு, சட்டத்துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, ஊரகத் தொழில்துறை அமைச்சர் மோகன், மாவட்ட ஆட்சியர் சம்பத், மாவட்ட எஸ்.பி. மனோகரன், கூடுதல் நீதிபதி சண்முகநாதன், எம்பிக்கள் ஆனந்தன், லட்சுமணன் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற னர்.

இவ்விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி தனபாலன் பேசியதாவது:

ஒரே நேரத்தில் 6 நீதிமன்றங்கள் திறக்கப்படுவது விழுப்புரம் மாவட்டதில்தான். இதற்கு கார ணமான தமிழக முதல்வர், சட்டத்துறை அமைச்சர், நீதித்துறை நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜனநாயகத்தில் உள்ள முதல் மூன்று தூண்களும் தடுமாறினால் ஜனநாயகம் விழுந்துவிடும். இந்தியாவிலுள்ள எல்லா நீதி மன்றங்களிலும் 12 கோடி வழக்கு கள் நிலுவையில் உள்ளன.விழுப்புரம் மாவட்டதில் 38,153 சிவில் வழக்குகளும், 12,297 கிரிமி னல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் லோக் அதாலத் மூலம் ஒரு மிக பெரிய தாக்கத்தை உண்டாக்கினார். கடந்த 23ந்தேதி லோக் அதாலத் மூலம் 28 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

வழக்கறிஞர்களும் தங்களின் கோரிக்கைக்காக நீதிமன்ற புறக்கணிப்பு என்ற நிலைக்கு செல்லக்கூடாது. உங்களின் குறைகளை எங்களிடம் சொன்னால் நாங்கள் தீர்த்து வைக்க தயாராக உள்ளோம். இப்படி ஒருங்கிணைந்து செயல் பட்டால்தான் வழக்குகளை விரைந்து முடிக்க முடியும் என்று தெரிவித்தார்.

முன்னதாக பேசிய அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதாவது: நீதிதுறையினரின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளில் நீதிதுறைக்கு ரூ.162.13 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE