சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய விதிக்கப்பட் டிருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித் துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப் பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 10 முதல் 50 வயதுடைய பெண்கள் 48 நாட் கள் விரதம் இருக்க முடியாது என்பதாலும், மாதவிடாய் காலத் தில் அவர்கள் கோயிலுக்குள் நுழையும்போது கோயிலின் புனிதத் தன்மை பாதிக்கப்படும் என்றும்
காரணம் தெரிவித்து கோயில் நிர்வாகத்தால் அனுமதி மறுக் கப்பட்டு வந்தது. இந்த நடை முறையை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
மத்திய அரசு, கேரள அரசு, திருவாங்கூர் தேவஸ்தான நிர்வாகம், திருவிதாங்கூர் சமஸ்தான வாரிசுகள் என அனைத்து தரப் பினரின் வாதங்களையும் கேட்ட றிந்த உச்ச நீதிமன்றம் நேற்று இறுதி தீர்ப்பளித்தது.
பெரும்பான்மை நீதிபதிகள்
தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் 4 நீதிபதிகள் ஒரு தீர்ப்பையும் ஒரு பெண் நீதிபதி மாறுபட்ட தீர்ப்பையும் அளித்துள்ளனர்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய நான்கு பேரும் அளித்துள்ள தீர்ப்பு:
பக்தர்கள் விஷயத்தில் பாலியல் ரீதியான பாகுபாடு கூடாது. ஆண் களுக்கு பெண்கள் இளைத்தவர் கள் என்றோ, தகுதி குறைந்த வர்கள் என்றோ கருத முடியாது. மதநம்பிக்கை என்ற பெயரில் வழிபாட்டில் ஆணாதிக்க நடை முறையை அனுமதிக்க முடியாது. உடல்ரீதியான அல்லது வெளிப்புற வித்தியாசத்தின் அடிப்படையில் பெண்களை பாரபட்சமாக நடத்தி அவர்களின் வழிபாட்டு சுதந்திரத்தை பறிப்பதை ஏற்க முடியாது.
சபரிமலை வழிபாட்டில் பெண் களை ஒதுக்க வேண்டும் என்பது வழிபாட்டு முறையின் அங்கம் என்ற வாதத்தை ஏற்க முடியாது.
விரதம் இருப்பது மனம் சம்பந்தப் பட்ட விஷயம். வெளிப்புற வித்தியா சத்தை காரணம் காட்டி, பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. புனிதம், சுத்தம், அழுக்கு போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி தனிப்பட்டவர்களை ஒதுக்குவதை சட்டத்தால் ஏற்க முடியாது. இத்தகைய நடைமுறை தீண்டாமைக்குச் சமம். எனவே, 10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதி மறுத்து 1955 மற்றும் 1956-ல் சபரிமலை தேவஸ்தானம் பிறப்பித்த சுற்றறிக்கை மற்றும் 1965-ம் ஆண்டு கேரள அரசால் வழிபாட்டுத் தலங்களில் நுழையும் உரிமை குறித்த சட்டத்தின் பிரிவு 3(பி) ஆகியவை சட்ட விரோதமாக கருதப்பட்டு ரத்து செய்யப்படுகின்றன.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
பெண் நீதிபதி மாறுபட்ட தீர்ப்பு
இந்த அமர்வில் இடம்பெற் றிருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா அளித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
ஆழமான மத உணர்வுகளைக் கொண்ட வழிபாட்டு உரிமையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களில் அறிவுப்பூர்வமான வாதங்களை நுழைத்துப் பார்ப்பது ஏற்புடையதல்ல. இந்திய அரசிய லமைப்புச் சட்டம் பிரிவு 25-ன் கீழ், தெய்வச் சிலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக் கப்பட்டுள்ளன.
மத வழிபாட்டுத் தலங்களில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவும் நடத்தை விதிகளை வகுக்கவும் வழிபாட்டுத் தல நிர்வாகத்துக்கு உரிமை உண்டு. இவை மத வழிபாட்டு சுதந்திரத்தின் அங்க மாகும். எனவே, இந்த விஷயங் களில் தலையிடுவது அவர்களது மத வழிபாட்டு சுதந்திரத்தில் தலையிடும் செயலாகும். இவை நீதிமன்றங்கள் புரிந்து கொள்ளும் எல்லை வரையறைக்கு வெளியில் உள்ள விஷயங்களாகும். எனவே, சபரிமலையில் பெண்கள் நுழைய கட்டுப்பாடு விதித்திருப்பதில் எந்த தவறும் இல்லை.
இவ்வாறு நீதிபதி இந்து மல்ஹோத்ரா தீர்ப்பளித்துள்ளார்.
இருப்பினும், 4:1 என்ற அடிப் படையில் பெரும்பான்மை தீர்ப்பே இறுதி தீர்ப்பாக அமல்படுத்தப்படும். அதன்படி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய இதுநாள் வரை இருந்த தடை நீங்கியுள்ளது.
மூத்த வழக்கறிஞர் கருத்து
பெண் நீதிபதியின் மாறுபட்ட தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ‘நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் தீர்ப்பை நான் ஏற்க மறுக்கிறேன். அது வும் ஒரு பெண் நீதிபதியிடம் இருந்து இத்தகைய மாறுபட்ட தீர்ப்பு வெளியாகி இருப்பது வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
கேரள அரசு வரவேற்பும்.. அரச குடும்பத்தினர் எதிர்ப்பும்..
ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபாடு தொடர் பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப் புக்கு கேரள மாநில அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கேரளத்தைச் சேர்ந்த அரச குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில், அனைத்து வயது பெண்களும் வழிபட
லாம், அதைத் தடுப்பது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு பலதரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
கேரள மாநில தேவஸ்வம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன்: ஐயப்பன் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆணும் பெண்ணும் சமம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தந்துள்ளது. இது பெண்களுக்குக் கிடைத்த நீதியாகும்.
இருப்பினும் இந்தத் தீர்ப்பை அமல்படுத்தும் பொறுப்பு திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்திடம் உள்ளது. இந்த தீர்ப்பை அமல்படுத்துவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் தேவஸ்வம் வாரியம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.
திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத் தலைவர் ஏ.பத்மகுமார்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். இந்தத் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் வாரியம் எடுக்கும். இந்தத் தீர்ப்பில் பலருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும் வாரியம், தீர்ப்பை மதித்து அதை அமல்படுத்தும். சபரிமலை தந்திரி, மாநில அரசு, பந்தளம் அரசு குடும்பத்தாருடன் கலந்து ஆலோசனை நடத்திவிட்டு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவஸ்வம் வாரியம், சட்டத்தை மதித்து நடக்கக் கூடிய அமைப்பு. எனவே தீர்ப்பை அமல்படுத்துவோம். இதில் யாரும் கவலை கொள்ள வேண்டாம்.
சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு: இந்தத் தீர்ப்பு துரதிருஷ்டவசமானது. நீண்ட காலமாக கடைப்பிடித்து வரும் ஒரு சம்பிரதாயத்துக்கு தடை போடுவது போல இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
கேரள பந்தளம் அரச குடும்பத்தார்: இந்தத் தீர்ப்பு எங்களுக்குக் கவலை அளிக்கிறது. இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்க வேண்டாம். தீர்ப்பை முழு வதையும் படித்த பின்னர் இதுதொடர்பாக கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
முக்கிய செய்திகள்
மற்றவை
1 day ago
மற்றவை
3 days ago
மற்றவை
14 days ago
மற்றவை
19 days ago
மற்றவை
26 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago