ஆந்திர மாநிலத்தில், விஜயநகரம், விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் பழங்குடி இனத்தவர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் வனப்பகுதிகளுக்கு இன்றளவிலும் போதிய போக்கு வரத்து வசதிகள் இல்லை. இத னால், பள்ளிக்கு செல்லவோ, மருத்துவமனைகளுக்கு செல் லவோ இவர்கள் பெரும் அவதிப் பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, மருத்துவமனைக்கு செல்லும் கர்ப்பிணிகள் சில சமயம் உயிரிழந்துள்ளனர். பிரசவத்தின் போது, பல சிசுக்களும் உயிரிழந்து வருகின்றன. இதனைத் தடுக்க அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தும், நிதி ஒதுக்கியும் பல னில்லை. வனப்பகுதி என்பதால், சாலை அமைக்க காண்டிராக்டர்கள் முன்வருவதில்லை எனும் குற்றச் சாட்டும் அரசு தரப்பில் கூறப்படு கின்றது.
இந்நிலையில், விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள பழங்குடி இன கிராமமான மாசிக வலச சிந்தலா சாலூர் கிராமத்தைச் சேர்ந்த முத்தம்மா என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், மூங்கிலால் ஊஞ்சல் உருவாக்கி, அதில் புடவையை சுற்றி முத்தம்மாவை அரசு மருத்துவ மனைக்கு கிராமத்தினர் அவசர அவசரமாக கொண்டு சென்றனர்.
சுமார் 7 கி.மீ. தூரமுள்ள அந்த மருத்துவமனைக்கு செல்ல சரியான பாதை இல்லை. கரடு முரடான பாதையில், சேற்றில் நடந்தவாறே பழங்குடியினர் முத்தம்மாவை தோளில் சுமந்தபடி தூக்கிச் சென்றனர். ஆனால், பாதி வழியிலேயே முத்தம்மாவிற்கு பிரசவ வலி அதிகமானது. இதனால், வழியிலேயே முத்தம்மாவை கற்கள் நிறைந்த வனப்பகுதியில் இறக்கி, உடன் வந்த பெண்கள் பிரசவம் பார்த்தனர். அப்போது அழகான ஆண் குழந்தை பிறந்தது.
தொப்புள் கொடியை பிளே டால் துண்டித்தனர். இதனை, உடன் வந்த ஒரு இளம் வாலிபர் இவர்கள் படும் துன்பத்தையும், பிரசவ வலியால் துடிக்கும் முத்தம்மாவையும் தனது செல் போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.
இந்த வீடியோ ஆந்திரா முழு வதும் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கண்டு, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இனி யும் இதுபோன்று நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் என சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பியுள்ளனர். தற்போது, முத்தம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
2 days ago
மற்றவை
5 days ago
மற்றவை
6 days ago
மற்றவை
17 days ago
மற்றவை
22 days ago
மற்றவை
29 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago