ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் அருங்காட்சியகத்தில் இருந்த ரூ.50 கோடி மதிப்பிலான தங்க டிபன் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
ஹைதராபாத் பாத்தபஸ்தி பகுதி யில் நிஜாம் அருங்காட்சியகம் உள் ளது. இங்கு, நிஜாம் மன்னர்கள் பயன்படுத்திய தங்க சிம்மாசனம், வைர, வைடூரிய ஆபரணங்கள், தங்கம், வைரங்களால் வடிவமைக் கப்பட்ட டிபன் பாக்ஸ், நவரத்தின கற்களால் உருவாக்கப்பட்ட குவ ளைகள், தந்தங்களால் ஆன பல ஆயுதங்கள் போன்ற விலையு யர்ந்த பல்வேறு பொருட்கள், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தை சுற்றிலும் சுமார் 15 மீட்டர் உயர சுற்றுச்சுவர் உள்ளது. மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 3 பேர், இரவில் 5 பேர் என தினமும் 8 காவலர்கள் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கம்போல், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அருங்காட்சியகம் மூடப்பட்டது. மறுநாள் காலையில் ஊழியர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது, தங்க டிபன் பாக்ஸ், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட குவளை மற்றும் கிண்ணம், மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தங்க ஸ்பூன் போன்ற பொருட்கள் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள் ஆகியவற்றுடன் வந்த போலீஸார் அருங்காட்சியகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதில், அருங்காட்சியகத்தின் மாடியில் உள்ள கண்ணாடி ஜன் னலை உடைத்து, பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றிருப் பது கண்டுபிடிக்கப்பட்டது. இத னால், திருடர்கள், அருங்காட்சி யகம் குறித்து நன்றாக தெரிந்த நபர்களாக இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். மற்ற கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் பரிசீலித்ததில், அந்த வழியாக அதிகாலை 3 முதல் 5 மணி வரை மோட்டார் சைக்கிள்களில் சிலர் உளவு பார்த்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த மோட்டார் சைக்கிள்களின் எண்களைக் கொண்டு, சந்தேகத்தின் பேரில் சிலரை போலீஸார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். மேலும், கொள்ளையர் களைப் பிடிக்க 12 தனிப்படையை காவல் துறை அமைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
2 days ago
மற்றவை
5 days ago
மற்றவை
6 days ago
மற்றவை
17 days ago
மற்றவை
22 days ago
மற்றவை
29 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago