ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக என்கவுன்ட்டரில் தமிழர் சுட்டுக் கொலை

By என்.மகேஷ் குமார்

ஆந்திராவின் சேஷாசல வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை வனத்துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இதுவரை, ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் சேஷாசல வனப்பகுதி என்பது திருப்பதி, கடப்பா, நெல்லூர், கர்னூல் வரை பரவியிருக்கும் வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியில் அதிக அளவில் செம்மரங்கள் உள்ளன. இவற்றை பல ஆண்டுகளாக செம்மர கடத்தல் கும்பல் வெட்டி, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் வழியாக வெளி நாடுகளுக்கு கடத்தி வருகின்றன.

இதனைக் கட்டுப்படுத்த கடந்த 7 ஆண்டுகளாக போலீஸார், வனத்துறையினர் கூட்டாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், செம்மரக் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் திருப்பதியை மையமாக கொண்ட அதிரடிப்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும், தினமும் இந்த வனப்பகுதிகளில் இருந்து வேன், லாரி, கார் போன்ற வாகனங்களில் செம்மரங்கள் கடத்தப்பட்டு வருவது தொடர் கதையாகியுள்ளது.

அதேபோல், இந்தக் கடத்தல்களைத் தடுக்க முயலும் போலீஸார் மற்றும் வனத்துறையினர் மீதும் செம்மரக் கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் இதுவரை 4 வனத்துறையினர் உயிரிழந்துள்ளனர். வனத்துறையினர், தங்களை தற்காக்கும் பொருட்டு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 32 பேர் பலியாகியிருக்கின்றனர். எனினும், செம்மரக்கடத்தல் சம்பவம் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, சித்தூர் மாவட்டம், காளஹஸ்தி அருகே உள்ள மேல்சூர் வனப்பகுதியில் ரயில்வே கோடூர் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட தமிழக கூலித் தொழிலாளர்கள், வனத்துறையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் கடத்துவதற்காக செம்மரங்களை வெட்டியதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியைச் சேர்ந்த காமராஜர் (55) என்பவர் உயிரிழந்தார்.

மேலும், இந்த சம்பவத்தில் ஜெகன் என்ற வன ஊழியர் படுகாயமடைந்தார். இவர் தற்போது காளஹஸ்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், தப்பி ஓடிய மற்ற செம்மர கடத்தல் கும்பலை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

9 days ago

மற்றவை

17 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்