தெ
லுங்கு பேசும் மக்களின் புது வருடப் பிறப்பாக யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது அவர்களுக்கு முக்கியமான பண்டிகையும் கூட. அப்படிப்பட்ட யுகாதி திருநாளை தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட ஒரு கிராமம் புறக்கணித்திருக்கிறது. இன்று நேற்றல்ல, 300 ஆண்டுகளாக இதுதான் நிலை. அப்படி என்ன காரணமாக இருக்கும். அறிய புறப்பட்டோம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியத்தில் உள்ளது கொமாரனப்பள்ளி கிராமம். தெலுங்கு மொழியை தாய் மொழி யாகக் கொண்ட மக்கள்தான் இங்கு பெரும்பான்மை. சுற்றியுள்ள கிராமம் முச்சூடும் யுகாதியை கொண்டாடி மகிழ, கொமாரனப்பள்ளி மட்டும் அந்த நாளில் களையிழந்து காணப்பட்டது.
நாம் அதே கிரமாத்தைச் சேர்ந்த சீனிவாச ரெட்டியிடம் பேசினோம். அவர் கூறியது: கொமாரனப்பள்ளி கிராமத்தினர் 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை யுகாதி பண்டிகையை சிறப்பாக கொண்டாடியவர்கள்தான். அருகில் உள்ள கிராம மக்களை எல்லாம் அழைத்து விருந்து வைத்து வழியனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தனர். பண்டிகைக்காக சமைக்கப்படும் உணவுகளை படையலிட்டு வணங்கும்போது நாகப்பாம்பு தோன்றி அங்கு வைக்கப்பட்டிருக் கும் பாலை குடித்து விட்டுச் செல்வது வழக்கமாக இருந்து வந்தது.
அப்படி ஒரு திருவிழா நாளில் மக்களுக்கு விருந்து வைப்பதற்காக உணவு தயாரித்துள்ளனர். சுடச்சுட பாயசம் செய்து, பாத்திரத்துடன் ஒரு திண்ணை யில் வைத்துவிட்டு அடுத்த உணவை சமைக்கச் சென்றுவிட்டனர். திண்ணை யின் மீது வைக்கப்பட்ட வெண்ணிற பாயசம் சில நிமிடங்களில் நீல நிறமாக மாறியது. பாத்திரத்தின் கீழே கருகிய நிலையில் நாகப்பாம்பு ஒன்று இறந்து கிடந்தது. இதனால் கிராமமே நாக தோஷத்துக்கு ஆளானது. இனி யாரும் யுகாதி பண்டிகை கொண்டாடக் கூடாது என ஊர் கூடி முடிவு எடுத்து ஊர்க் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. இதனால்தான் 300 ஆண்டுகளைக் கடந்தும் இன்று வரை யுகாதி பண்டிகை கொண்டாடுவதில்லை’’ என்று கூறி முடித்தார்.
இந்த கதையும் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு தற்போதைய மக்கள் வரை தெரிந்து வைத்திருக்கின்றனர். யுகாதிக்கு ‘நோ‘ சொல்கின்றனர்.
முக்கிய செய்திகள்
மற்றவை
1 day ago
மற்றவை
2 days ago
மற்றவை
13 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
25 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago